உயர்கல்வி மாணவர்களை திண்டாடவிட்ட தி.மு.க.,
உயர்கல்வி துறையை மேம்படுத்துவதாக, கடந்த தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'பல்கலைகளின் வேந்தராக, கவர்னர் இருக்கக்கூடாது. முதல்வரே இருக்க வேண்டும்' எனக் கூறி, கவர்னருடன் மோதலில் ஈடுபட்டதால், உயர்கல்வி துறை வீழ்ச்சியை நோக்கி சென்றது. அரசு எடுத்த தவறான முடிவால், எட்டு பல்கலைகள் துணைவேந்தர் இல்லாமலே இயங்கி வருகின்றன. மேலும், அனைத்து பல்கலைகளும் நிதி சிக்கலில் தவித்து வருகின்றன. ஆட்சிக்கு வந்ததும், உயர்கல்வி துறை மானிய கோரிக்கையின்போது, 4,000 புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி, நியமனத்தை தள்ளிப் போட்டனர். ஆட்சி முடியும் தறுவாயில், 2,470 பேராசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு முடிவு முழுமையாக வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம், அரசின் நிதி பற்றாக்குறை எனக் கூறப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இப்படி தான் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் பல லட்சம் கட்டணமாக பெற்று ஆரஞ்சு குறியீடு தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, ஆனால் நடைமுறை படுத்த ஒத்துழைப்பு இல்லை
ஜெயா ஆட்சியில் முதல்வர் பதவி நிரந்தரமல்ல. ஆளுநர் தான் வேந்தராக இருக்கணும்ன்னு கருணாநிதி கவர்னரிடம் கூறி சட்டத்திற்கு ஒப்புதலை நிறுத்தினார். இப்போ அவரது மகன் பல்டி அடித்து முதல்வரே வேந்தர் என UCG விதிகளுக்கு எதிராக செல்லாத சட்டம் போட முயன்று பல்கலைக் கழகங்களை திவாலாகும் நிலையில் விட்டுவிட்டார்.
செயயமாட்டாகன்னு தெரிந்தும் ஓட்ட யார் போட சொன்னது. மறுபடியும் இந்த தேர்தலில் ஓட்டு போட்டு மறுபடியும் செத்து மடியும் அடிமைகள்
எல்லா நிதியையும் உரிமை தொகை மற்றும் தண்ட இலவசங்கள் சாப்பிடுகின்றன. எதுவும் நடக்காது.
உயர் கல்வி மந்திரி செய்த லீலையில் தமிழகமே வெலவெலத்துப்போனது?