Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 2021 தேர்தலோடு மறந்து போன வாக்குறுதிகள்

 2021 தேர்தலோடு மறந்து போன வாக்குறுதிகள்

தி.மு.க., சார்பில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவற்றின் விவரம்:
* சட்டசபை நிகழ்ச்சிகள் 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பப்படும்
* சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும்
* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
* மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
* ரேஷன் கடைகளில், மாதம் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்
* அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும், பெண்கள் இட ஒதுக்கீடு, 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக்கப்படும்
* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, 'சைபர்' காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்
* கடலோர மாவட்டங்கள் அனைத்திலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
* 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்
* ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில், 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும்
* சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக பணியமர்த்தி, கால முறை ஊதியம் வழங்கப்படும்
* தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க, தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
* அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில், காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், 75 சதவீதம் வேலை வாய்ப்புகள், தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்
* கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அனைத்தும், 'டாமின்' நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்
* அரசுத் துறை நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேல், தற்காலிகப் பணியில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்
* போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்
* மீனவ சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்
* மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் ஆக்க சட்டம் கொண்டு வரப்படும்
* இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்
* பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்
* ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
* சென்னை சிறுசேரி பகுதியில், நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்
* பள்ளி மாணவர்களுக்கு, காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்
* 30 வயதுக்கு உட்பட்ட, தமிழகக் கல்லுாரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
* லோக் ஆயுக்தா, முறையாகவும் முழுமையாகவும் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு உடனடியாக மேற்கொள்ளும். அதன் வழியே எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் தாமதமின்றி விசாரிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர்
* தென் மாவட்டங்களுக்கென, மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கப்படும்
* குடும்ப அட்டைதாரர்களுக்கு, அனைத்து ரேஷன் கடைகளில், மற்ற பொருட்களுடன் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும்.

Advertisement

ஏப் 20, 2026 12:43 pm

அந்த வாக்குறுதிகளை நிறை வேற்றினால் இந்த தேர்தலுக்கு என்ன வாக்குறுதி தருவது ஆக அதே வாக்குறுதிகளை 10தேர்தலுக்கு திமுக தொடர்ந்து கொடுக்கும்

Reply Rate this