Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு என்னாச்சு?

பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு என்னாச்சு?

அரசு பணியிடங்களில், பெண்களுக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு, 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது உட்பட, மனித வள மேலாண்மைத் துறையில் பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

அவற்றின் விபரம்:

* லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை வாயிலாக, பணப்பரிமாற்றம் மற்றும் தரவுகளின் ஆய்வுக்காக மென்பொருள் நிறுவனத்துடன், நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர், இணையதள குற்ற தடயவியல் நிபுணர், ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருமான வரி ஆய்வாளர்கள் பயன்படுத்தப்படுவர்
* அரசுப் பணியிடங்களில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இட ஒதுக்கீடு, 40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்குரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்
* பணமோசடி மற்றும் நிதி கையாடல்களை தவிர்க்க, வங்கி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது போல், அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இணையவழி பயிற்சிக்கு பின், சிறு தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்
* அரசு துறைகளில், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவும், அந்த நியமனங்கள் நியாயமானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்யவும், ஒருங்கிணைந்த தனி இணையதளம் உருவாக்கப்படும்
* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின், 46 பிரிவு அலுவலகங்களுக்கு, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளின் விசாரணைக்கு, குரல் பதிவு செய்யும் கருவி வழங்கப்படும்
* மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை முன்மொழிய, மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும்
* அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட, அனைத்து அரசு துறைகளில் இருக்கும் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களை சேகரித்து, அவற்றின் பயன்பாட்டை கண்காணிக்க, சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும்
* தணிக்கை துறைகளை ஆய்வு செய்து, சீர்திருத்தங்கள் மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை வெளியிடப்படும்
* பல்வேறு துறைகளின் 150 சேவைகளை இணையவழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
* அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், முன்னணி கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்கள் விருப்பப்படி கட்டணமின்றி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

Advertisement