/ செய்திகள் / தி.மு.க.,வில் ரூ.2 கோடி; பா.ஜ.,வில் ரூ.1 கோடி!

தி.மு.க.,வில் ரூ.2 கோடி; பா.ஜ.,வில் ரூ.1 கோடி!

தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், தலா 2 கோடி ரூபாயும்; பா.ஜ., தொகுதிகளில், தலா 1 கோடி ரூபாயும், கட்சியினரின் தேர்தல் செலவுக்காக பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.* தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., மட்டும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணிகள் தான் முக்கியம். அவர்களை 'கவனிப்பதில்' பாரபட்சம் கூடாது என, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.அவர்களின் செலவுக்கு தலைமையில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும், அதை முறையாக வழங்க வேண்டும் என்றும் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, அனைத்து தொகுதிகளுக்கும் தலா 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வார கடைசியில் ஒருமுறையும், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில் ஒருமுறையும் மீண்டும், 'கவனிப்பு' செய்யப்படும் என, பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.* அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வசதி குறைவானோர். தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.எனவே, தொகுதிக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதை, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கும் தேர்தல் செலவுகளுக்கும் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sundararajan
ஏப் 14, 2026 14:33

அதிமுக எவ்வளவு செலவு செய்கிறது?


M Ramachandran
ஏப் 14, 2026 11:05

பூத் கமிட்டி எதிர் கட்சி ஏஜான்ட்டுகளுக்கு ஸ் ஸ்பெஸல் கவனிப்பும் பண முடிப்பும் கொடுத்த கவனிப்பு உண்டு அது நிச்சயம் நடக்கும்.


ஆகுயார்தோன்
ஏப் 14, 2026 08:55

இதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. தீய சக்திகளை அகற்ற எதையும் செய்யலாம். கோவணம் கட்டாத ஊரில் காட்டியவர் பைத்தியக்காரன். விஷத்தை விஷத்தால்தான் எடுக்கணும்


V Narayanan
ஏப் 14, 2026 07:02

இந்த பணத்தை எடுத்து செல்ல அனுமதி உண்டா ?.


sankaranarayanan
ஏப் 14, 2026 06:19

தேர்தல் மாதம் இந்த மாதமும் அடுத்த மாதமும் திராவிட மாடல் அரசில் யாருமே வங்கிக்கு செல்ல வேணடாம் கையில் பணம் தானாகவே வந்து சேரும் அதற்கு பிறகு அவர்க அடிமைகள் இருக்கும் பொருளை விற்று புழைக்க வேண்டும்