Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க.,வில் ரூ.2 கோடி; பா.ஜ.,வில் ரூ.1 கோடி!

 தி.மு.க.,வில் ரூ.2 கோடி; பா.ஜ.,வில் ரூ.1 கோடி!

தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், தலா 2 கோடி ரூபாயும்; பா.ஜ., தொகுதிகளில், தலா 1 கோடி ரூபாயும், கட்சியினரின் தேர்தல் செலவுக்காக பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
* தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., மட்டும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணிகள் தான் முக்கியம். அவர்களை 'கவனிப்பதில்' பாரபட்சம் கூடாது என, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் செலவுக்கு தலைமையில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும், அதை முறையாக வழங்க வேண்டும் என்றும் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, அனைத்து தொகுதிகளுக்கும் தலா 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வார கடைசியில் ஒருமுறையும், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில் ஒருமுறையும் மீண்டும், 'கவனிப்பு' செய்யப்படும் என, பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
* அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வசதி குறைவானோர். தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, தொகுதிக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதை, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கும் தேர்தல் செலவுகளுக்கும் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement