தி.மு.க., ஆட்சி தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. அது தொடரும் என்பது உறுதி' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். 'மே' தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 'மே' தினப் பூங்காவில் அமைந்துள்ள, 'மே' தின நினைவு சின்னத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: தொழிலாளர்களின் உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், 'மே' முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தி.மு.க., வினர் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலனை, வரும் 4-ம் தேதி பெற இருக்கிறோம். அதில் துளி அளவு கூட மாற்றமில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு, ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை, அனைவருக்கும் இருக்கிறது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம். அது தொடரும் என்பது உறுதி. தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும், கருணாநிதி எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, நான் மட்டுமல்ல, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம். இவ்வாறு பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 16 )
விடியல் கட்சியில் அழிவு தமிழகத்தின் வசந்தம் ..வருகின்றவர் யாராக இருந்தாலும் ஊழலற்ற நல்லாட்சி தருக
போதையை கொடுத்து தமிழகத்தை கண்ணீரில் தள்ளிய இவர்களின் குடும்பங்கள் நாசமாகப் போகட்டும்.. வயிறு எரிந்து சாபம் விடுகிறோம்....
At Arivillalayam
தெய்வமே.. இன்னும் அஞ்சு வருசத்துக்கு கலைஞர் ஆட்சியா? தாமிழ்நாடு தாங்குமா? இரக்கமே இல்லியா?
எல்லோருக்கும் திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தது
அப்ப தமிழ்நாட்டுக்கு சங்கு ஊதி விட வேண்டியது தான்.... 5 வருஷ பழைய வசனங்களை மறுபடியும் கேக்கணுமா?
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் எப்படி இருந்தாரோ அதே போல இப்ப இருக்காரு. அதாவது எதிர்க்கட்சி தலைவராக மாறி விட்டார்
திமுக மீண்டும் வெற்றி பெற்றால் பலர் இங்கு வயிற்றெரிச்சலில் அல்சர் வந்து அவதிப் படுவார்களே, பாவம்...
ஆமாம் வீணா போன....நாடு என்ன ஆகுமோ என்ற வயிற்றெரிச்சல்
THIYAMUKA VETRI PETRAAL.
தமிழகத்தை ஆளவேண்டியது தான்.
அதோடு தமிழகம் முழுமையாக சூறையாடப்படும் தமிழர், தமிழர் கலாச்சாரம் முழுமையாக அழிக்கப்படும். மதமாற்றங்கள் அதிகமாக ஊக்குவிக்கப் படும் என்பதையும் குறியிருக்கலாமே. திமுக ஆட்சி மறுபடி வந்தால் அதற்க்கு காரணம்.விலை போன தமிழர்கள்தான். பொது, மது ஆறக ஓடும் . சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலையும். இரும்புக்கரம் துரு பிடித்து உடைந்து தொங்கும்.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am