/ கட்டுரை / மீடியாவை கட்டுப்படுத்துவதில் சீனாவை விஞ்சிய தி.மு.க.,

மீடியாவை கட்டுப்படுத்துவதில் சீனாவை விஞ்சிய தி.மு.க.,

அனாமிகா

ஊடகவியலாளர்களையும் விமர்சகர்களையும் சிறையில் அடைப்பதில் உலக அளவில் முன்னிலையில் உள்ள சீனாவை போல், தமிழகமும் மாறி வருகிறது. மேடை பேச்சாலும் எழுத்தாலும் வளர்ந்து, ஆட்சிக்கு வந்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு. அதே எழுத்தையும் பேச்சையும் முடக்கும் வேலையை, 'திராவிட மாடல்' அரசு கடந்த ஐந்தாண்டுகளாக செய்தது.* தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே, அக்கட்சியை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தவர் கிஷோர் கே.சாமி. அண்ணாதுரை பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார் என்பதற்காக, நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது* பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், அனைத்து கட்சியினரையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தி.மு.க., அரசின் ஊழல்களையும், காவல் துறையின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து காணொலிகளை வெளியிட்டார். இவர் பலமுறை கைது செய்யப்பட்டார். அவருடன் பணியாற்றுவோர் மிரட்டப்பட்டனர். அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனைகள் அரங்கேறின.கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவரது வீட்டில் சாக்கடை நீரும் மலமும் கொட்டப்பட்டன, பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்போது, எந்த கருத்தையும் காணொலியில் பதிவிடக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே அவர் ஜாமினில் அனுப்பப்பட்டார். ஆனாலும், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது கருத்துகள் வருவதால், அவரை பேட்டி கண்ட யு டியூபர்கள் மிரட்டப்படுகின்றனர். 'சவுக்கு சங்கர் பேட்டிகளைப் போடக்கூடாது, அவர் பதுங்கியிருக்கும் இடம் எது?' என்று காவல் துறை நிர்ப்பந்திப்பதாக யு டியூபர்களே புகார் கூறுகின்றனர்.சங்கரை நேர்காணல் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக 'ரெட் பிக்ஸ்' யு டியூப் சேனலின் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் கைது செய்யப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது. சங்கர், தற்போது, ஆந்திராவில் இருந்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்* கடந்த 2023ல், மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து யு டியூப் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, வன்முறையை துாண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு அதிகாலையில் கைது செய்யப்பட்டார்* கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக, தன் 'அறம்' இணைய இதழில் கட்டுரை எழுதிய மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், திடீரென கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்* அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அரசையும் விமர்சித்து காணொலி வெளியிட்ட யு டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.அரசை விமர்சிப்பவர்கள் மீது மின்னல் வேகத்தில் பாயும் காவல் துறை, ஆளுங்கட்சியினர் தவறு செய்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கரூர் அருகே தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில், விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர் மீது, அந்த எம்.எல்.ஏ.,வே தாக்குதல் நடத்தினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.பள்ளிச் சிறுவர்கள், முதல்வரின் கான்வாயை நிறுத்தி செல்பி எடுத்ததை பெருமையாக கருதி, அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. அந்த எம்.எல்.ஏ., மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.'ஐ.டி., விங்' படை ஒரு புறம், விமர்சகர்களின் குரல்வளையை போலீசை வைத்து நெரிக்கும் வேலையை தொடர்ந்து செய்த தி.மு.க., மறுபுறம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி என்ற, இணையத்தில் செயல்படும் குண்டர் படையை அமைத்தது. அதன் மூலம் 40க்கும் மேற்பட்ட நபர்களை சம்பளத்திற்கு அமர்த்தி, யு டியூப் சேனல்களை தொடங்கி, அரசுக்கு ஆதரவான பிம்பத்தை கட்டமைக்கும் வேலைகள் சத்தமின்றி நடந்தன.அரசை விமர்சிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை முகநுால் மற்றும் எக்ஸ் தளங்களில் ஒருங்கிணைந்து தாக்கி, தனிமனித தாக்குதலை இந்தக் குழுவினர் கச்சிதமாகச் செய்தனர். அப்படி பாதிக்கப்பட்டவர் ஷாலின் மரிய லாரன்ஸ். தி.மு.க.,வை விமர்சித்து தொடர்ந்து முகநுாலில் எழுதுவதால், சொல்ல முடியாத அளவிலான வசைகளுக்கு இணைய வெளியில் ஆளாகி வருகிறார்.இவர்களது இணைய தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் பல பத்திரிகையாளர்கள் மவுனமாகிவிட்டனர். ஒன்று, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசு; இல்லையெனில் ஓடி விடு என்பது தான் இவர்களது ஒரே கொள்கை.ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், அச்சுறுத்தல் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த நினைப்பது ஜனநாயகத்திற்கு விடப்படும் மிகப்பெரிய சவால்.'இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்' என்பது ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறைச் சட்டம். எந்தவொரு விசாரணையும் இன்றி அரசுக்கு எதிரானவர்களை சிறையில் அடைக்கும் அந்த சர்வாதிகார போக்கு, சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் தமிழகத்தில் தொடர்கிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Barakat Ali
ஏப் 11, 2026 21:08

சீனாவில் ஊழலுக்கு மரண தண்டனை உண்டு ........


Skywalker
ஏப் 11, 2026 18:37

A billion praises to Dinamalar, for being one of the few fair journalists in the state


sundararajan
ஏப் 11, 2026 16:54

தினமலர் முதுகெலும்பு உள்ள நிறுவனம்.எலும்புத் துண்டுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சாமலெழுதுவதற்கு வாழ்த்துகள்.


முருகன்
ஏப் 11, 2026 15:33

கடந்த பதினொரு வருடமாக பத்திரிகையாளர்களை சந்திப்போதோ இல்லை அதற்கு எந்த நாட்டின் பெயர் வைக்கலாம்?


கலிவரதன்,திருச்சி
ஏப் 11, 2026 16:00

மூர்க்கப் பெயரில் இருக்கும் உன்னை உன் டொப்பிள் கொடி நாடான பாகிஸ்தானுக்கு விரட்டி விடலாம்!


ராஜ்
ஏப் 11, 2026 15:28

எல்லாம் திமுகவின் அராஜகம்


ஆரூர் ரங்
ஏப் 11, 2026 14:58

ரொம்ப எதிர்த்து பதிவிட வேண்டாமே. தி.மு.க பலருக்கு மலர் வளையம் வைத்த கட்சி என கனிமொழி பெருமையாகக் கூறிக் கொள்கிறார்.


அசோகன்
ஏப் 11, 2026 14:16

உண்மையை உரக்க சொன்ன தின மலருக்கு வாழ்த்துக்கள்


.......
ஏப் 11, 2026 13:26

நான் சென்னையில் உள்ள காவல் துறையில் பணிபுரியும் ஒரு உயர் அதிகாரி. இந்த தேர்தலில் திமுக மட்டும் தோற்று விட்டது என்றால் என்னையும் என் பதவியையும் போட்டு ஆட்டிப்படைத்து என்னை கொடுமைப் படுத்திய டைரியில் நான் எழுதி வைத்துள்ள திமுக அரசியல்வாதிகளுக்கு நான் லாடம் கட்டுவது உறுதி.


பாரதி
ஏப் 11, 2026 13:09

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய சட்டத்துறைக்கு என்ன வேலை என்றால் திருடர்கள் ரௌடிகள் தவறு செய்வதை வேடிக்கை பார்ப்பது நல்லவர்கள் நல்லது செய்தால் கண்டிப்பது தண்டிப்பது சபாஷ் வாங்கிய சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்கிறார்கள்


Govi
ஏப் 11, 2026 11:52

முடிவு கட்டும் நாள் மே 4