/ செய்திகள் / தேர்தல் விதிமீறல்; சீமான் மீது வழக்கு

தேர்தல் விதிமீறல்; சீமான் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், நேற்று ஓய்ந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்குள் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, பிரசாரம் இறுதி நாளில் 6:05 மணிக்கு மேல் ஆகியும் சீமான், தனது பேச்சை முடிக்கவில்லை.இதன் வாயிலாக அவர் தேர்தல் விதிகளை மீறியதாக, சீமான் மீதும், நா.த.க., நிர்வாகி ரவிச்சந்திரன் மீதும், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

விஜயகுமார்
ஏப் 23, 2026 17:25

பல பகுதிகளில் ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடாவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை தான் தண்டிக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 23, 2026 04:08

பணம் கொடுத்து ஒட்டு வாங்குபவர்களைக்கூட ஒன்றும் செய்யாத தேர்தல் ஆணையம் விதிகள் பற்றி பேசுவது வேடிக்கையானது...