தேர்தல் விதிமீறல்; சீமான் மீது வழக்கு
காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், நேற்று ஓய்ந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்குள் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, பிரசாரம் இறுதி நாளில் 6:05 மணிக்கு மேல் ஆகியும் சீமான், தனது பேச்சை முடிக்கவில்லை.
இதன் வாயிலாக அவர் தேர்தல் விதிகளை மீறியதாக, சீமான் மீதும், நா.த.க., நிர்வாகி ரவிச்சந்திரன் மீதும், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்