தவெக சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல்: ஓட்டு போட விஜய் 'கெட்-அப்'பில் தயாராகும் தொண்டர்கள்
சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜயை போல், வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து சென்று ஓட்டு போடுவதென, அக்கட்சி தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி பின், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி போலவே, வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வலம் வருகிறார். அவரை பின்பற்றி, தவெக தொண்டர்கள் பலரும், விஜயின் 'கெட்- அப்'பிற்கு மாறினர்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.23ல் நடக்கிறது. தவெக, தொடங்கிய பின் சந்திக்கும் முதல் தேர்தலை கொண்டாடி வரும் அக்கட்சி தொண்டர்கள், விஜய் போலவே வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து சென்று, ஓட்டுப்போட முடிவு செய்து அதற்காக தயாராகியும் வருகின்றனர்.
இதனிடையே, சட்டசபை தேர்தல் காரணமாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெள்ளை சட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில துணிக்கடைகளில், வெள்ளை சட்டையின் விலையும் உயர்த்தப்பட்டதாக தெரிகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்