பேரன்களை களம் இறக்கிய அனிதா; சென்டிமென்ட் மூலம் கவர முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்செந்துார் தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, தொகுதியில் சில இடங்களில் அதிருப்தி இருந்து வருகிறது. அவர் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரை பகுதிகளிலும், முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இதுவரை தி.மு.க.,வுக்கு மொத்தமாக கிடைத்த ஓட்டுகள், தற்போது த.வெ.க., பக்கம் திரும்பும் நிலை உள்ளது. இதனால், தொகுதி மக்களை சென்டிமென்ட் மூலம் கவர முடிவு செய்து தனது பேரன்களை களம் இறக்கி உள்ளார். மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மணப்பாடு பகுதியில், நேற்று திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்த அமைச்சர், கூடவே தனது இரண்டு பேரன்களான அத்யந்த் கிருஷ்ணா, ஆதவ் கிருஷ்ணா ஆகிய இருவரையும் அழைத்து சென்றிருந்தார். அவர்கள், 'எங்கள் தாத்தாவுக்கு ஓட்டு போடுங்கள். அவர் உங்களுக்கு நல்லதே செய்வார். அவர் கொடுத்த வாக்கை மீற மாட்டார்' என்று பேசினர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அரசியலுக்கு வரவில்லை. அதனால் மனவருத்தத்தில் இருந்தவர், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமலும் இருந்தார். தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியை சரிசெய்யவும், வரும் காலங்களில் தனது அரசியல் வாரிசுகள் தயாராக உள்ளனர் என்பதை தொகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், பேரன்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am