மேட்டுப்பாளையம் ராசி; வீழ்த்துவாரா ஸ்டாலின்?
கடந்த 2013ல், கோவை மேட்டுப்பாளையம் தென் திருப்பதி அருகே உள்ள நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற இணைப்பு விழா கூட்டத்தில், ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வில் இணைந்தார். ஆனால், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுபோல, கடந்த 2014 லோக்சபா தேர்தலில், அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா, தோல்வியடைந்தார். கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து இந்த இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் செய்தார். அந்த மேடையில் இருந்த அனைத்து பா.ஜ., வேட்பாளர்களும் அந்த தேர்தலில் தோல்வியடைந்தனர்.
இதனால், அந்தப் பகுதி ராசியில்லை என அரசியல் கட்சியினர் தவிர்ப்பர். அந்த இடத்தில், இரு தினங்களுக்கு முன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். இதேபோன்ற 'சென்டிமென்ட்' கொண்ட ஓசூர் பகுதியிலும் ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மோசமான 'சென்டிமென்ட்' நம்பிக்கையை, ஸ்டாலின் மாற்றுவாரா, என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்