வீரத்தை பா.ஜ.,விடம் காட்டட்டும்
அமைச்சர் மகேஷ், திருச்சி மாவட்டம், திரு வெறும்பூர் தொகுதி பிரசாரத்தில் பேசியதாவது: 'நாங்கள் மட்டும் கொரோனாவை விரட்டியடிக்கவில்லை என்றால், இன்றைய முதல்வர் இந்நேரம் பரலோகம் சென்றிருப்பார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். முதல்வரையும், துணை முதல்வரையும் தனிப்பட்ட முறையில் சாபமிடுவது சரியல்ல. பழனிசாமியின் பேச்சு, அவருடைய பதவி வெறியையும் அதிகார மோகத்தையும் காட்டுகிறது. பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள பழனிசாமி, மத்திய பா.ஜ., அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தையும், வீராப்பையும், முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக வைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am