Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'வீரத்தை பா.ஜ.,விடம் காட்டட்டும்'

 'வீரத்தை பா.ஜ.,விடம் காட்டட்டும்'

அமைச்சர் மகேஷ், திருச்சி மாவட்டம், திரு வெறும்பூர் தொகுதி பிரசாரத்தில் பேசியதாவது:

'நாங்கள் மட்டும் கொரோனாவை விரட்டியடிக்கவில்லை என்றால், இன்றைய முதல்வர் இந்நேரம் பரலோகம் சென்றிருப்பார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். முதல்வரையும், துணை முதல்வரையும் தனிப்பட்ட முறையில் சாபமிடுவது சரியல்ல. பழனிசாமியின் பேச்சு, அவருடைய பதவி வெறியையும் அதிகார மோகத்தையும் காட்டுகிறது.

பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள பழனிசாமி, மத்திய பா.ஜ., அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தையும், வீராப்பையும், முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக வைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement