தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு இருக்கிறதா: ஹிந்து முன்னணி
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடலுாரில் ஏ.பி.வி.பி., அமைப்பினர் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்தில், போலீசார் முன்னிலையிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சிகளால், இது போன்ற வன்முறைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
தேர்தல் மற்றும் போலீஸ் துறைகளில் தி.மு.க., ஆதரவாளர்கள் அதிகாரிகளாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. பல முக்கிய இடங்களில் இன்னும் அதிகாரிகள் மாற்றப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்