/ செய்திகள் / காங்கிரஸ், திமுகவில் சாதாரண தொண்டர் உயர்ந்த பதவியை அடைய முடியாது: பீயூஷ் கோயல்

காங்கிரஸ், திமுகவில் சாதாரண தொண்டர் உயர்ந்த பதவியை அடைய முடியாது: பீயூஷ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவில் ஸ்டாலின் குடும்பம் மட்டும், காங்கிரசில் சோனியா குடும்பம் மட்டும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். சாதாரண தொண்டர் அந்த பதவிக்கு வர முடியாது என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: திமுகவில் தொண்டராக அரசியல் பயணத்தை துவங்கும் ஒருவர் , அதிகபட்சம் குறிப்பிட்ட நிலையை மட்டுமே அடைய முடியும் என்பதை அவர் அவர் அறிவார். ஆனால் முதல்வர் பதவி அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட எந்த உயர்ந்த பதவியாக இருந்தாலும் அது கட்டாயம் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் கிடைக்கும். இது தான் தற்போதைய நிலைமை. காங்கிரஸ் கட்சியில் உயரிய தலைவர் பதவி எப்போதுமே நேரு, சோனியா குடும்பத்தை சேர்ந்தவர் தான் வர முடியும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை குழு தான் முடிவுகளை எடுத்தது.வெளிநாட்டு தூதுக்குழுத் தலைவருடன் சோனியா அமர்ந்து உள்ளதையும், மன்மோகன் சிங் ஓரமாக அமர்ந்துள்ளதையும் படங்களில் பார்த்திருக்கலாம். அரசின் சட்ட திருத்த நகலை, பத்திரிகையாளர்கள் முன்பு ராகுல் கிழித்து எறிந்ததை யாரால் மறக்க முடியும். அந்த சட்ட திருத்தம், இந்திய அரசால், மத்திய அரசால், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட அந்த உத்தரவை, குடும்பத்தின் இளைய வாரிசு என்பதால், காந்தி என்ற அந்த பட்டத்தை சுமப்பதால்மட்டுமே அவரால் அது கிழக்கப்பட்டது. ஆனால், பாஜவில் அப்படி நடப்பது இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.இந்த வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !