ஒட்டுக்கு பணம் பதுக்கலா? மீண்டும் சேகர்பாபு தொடர்பு இடங்களில 'ஐ.டி.,' சோதனை
சென்னை
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்கள் மற்றும் நடத்திவரும் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் வேட்பாளராக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரது மகன்கள் ஜெயசிம்மன்,விக்கேஷ் ஆகியோர் கடந்த 2021 டிச.,மாதம் 'எஸ் குரோத் அலையன்ஸ் எல் எல்.பி,' எனும் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.
இதன் அலுவலகம் சென்னை மயிலாப்பூரில் உள்ளது.இந்த அலுவலகத்தில் சேகர் பாபு போட்டியிடும் தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாட செய்ய கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில் கடந்த 13ம் தேதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் உடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டடசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணப் பரிமாற்றம் மற்றும் பட்டுவாட செய்ய ரகசிய டோக்கன்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருகின்றனர்.
இது குறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:எஸ் குரோத் அலையன்ஸ் எல் எல்.பி,' நிறுவனத்தில் வருமானவரி தாக்கலில் பெரும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத முதலீடுகள், நில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க வேண்டியுள்ளதால், மீண்டும் சோதனை நடக்கிறது.
சோதனையில் வெறும் கணக்கு வழக்குகளை மட்டும் கண்டறியவில்லை.தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களும், ரகசியக் குறியீடுகள் இட்ட 'டோக்கன்களும்' பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது.
மேலும் 2021-ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்குப் பல முன்னணி கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வந்த கோடிக்கணக்கான நிதி, தேர்தலுக்காகத் திரட்டப்பட்டதா என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

என்ன சோதனை வேண்டி கிடக்குது. உலகத்துக்கே தெரியும் dmkvin பெரிய திருடன் இவர் தான். வேட்பு மனுவை செல்லாது என்று அறிவித்து விடலாம்