/ செய்திகள் / இளைஞர்களை ஓட்டு போட விடாமல் தடுத்த போலீசார்: த.வெ.க., புகார்

இளைஞர்களை ஓட்டு போட விடாமல் தடுத்த போலீசார்: த.வெ.க., புகார்

சென்னை: த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வரும் இளைஞர்களையும், பெண்களையும், காவல் துறையினர் தடுத்ததாக, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். தேர்தல் கமிஷனுக்கு, அவர் அனுப்பிய புகார் மனு: ஓட்டுச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மதியம் 12:00 மணி முதல், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வரும் இளைஞர்களையும், பெண்களையும் தடுத்துள்ளனர். காவல் துறையின் இந்த அத்துமீறிய நடத்தையை எதிர்த்து, எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது,​இளம் வாக்காளர்கள் ஓட்டு போடுவதை தடுக்க, சென்னையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளனர். ஆட்சியை இழக்கும் நிலையை அறிந்து கொண்டதால், முதல்வர் ஸ்டாலினின் நேரடித் துாண்டுதலில், காவல் அதிகாரிகள் கடைசி முயற்சியாக, இந்த ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !