தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
திருப்போரூர்: திருப்போரூரில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் நேற்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து எம்.பி.க்கள், மாவட்ட செயலர்களிடம் காணொலி காட்சி வாயிலாக நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதேபோல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகம் முழுதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, நேற்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க.,வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமையில், பேரூராட்சி தலைவர் தேவராஜ் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், மசோதாவின் நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am