இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு காஞ்சியில் தமிழிசை பிரசாரம்
காஞ்சிபுரம்: அ.தி.மு.க., வேட் பாளர் சோமசுந்தரத்தை ஆதரித்து, முன்னாள் கவர்னரும், மயிலாப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளருமான தமிழிசை, காஞ்சிபுரத்தில் நேற்று பிரசாரம் செய்தார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலருமான சோமசுந்தரம் போட்டி யிடுகிறார். கூட்டணி கட்சியினருடன், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்திற்கு சென்ற இடங்களில், கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு சால்வை அணிவித்தும், மலர்கள் துாவியும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை நேற்று காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு ஆதரவாக தொகுதிக்கு உட்பட்ட மாநகர மேற்கு பகுதியான செவிலிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
முன்னதாக,காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்ற தமிழிசை,. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
பகுதி செயலர் கே.யு.எஸ்., சோமசுந்தரம் சார்பில், அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், மாநகாட்சி 41வது வார்டு கவுன்சிலர் சிந்தன், வட்ட செயலர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் விநாயகம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்