/ செய்திகள் / புதுச்சேரி சட்டசபை தேர்தல்; ரங்கசாமி ராஜ்யம்!
புதுச்சேரி சட்டசபை தேர்தல்; ரங்கசாமி ராஜ்யம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது சிறப்பு நிருபர்
புதுச்சேரியில் மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியை பிடிக்கிறது.யார் இந்த ரங்கசாமி!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வயது 76. தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ரங்கசாமி. 2001ல் அவருக்கு முதல்வர் பதவி தேடி வந்தது. 2006 தேர்தலிலும் முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.கோஷ்டிப்பூசலுக்கு புகழ் பெற்ற காங்கிரஸ் கட்சியில், ரங்கசாமிக்கு எதிர்ப்பு வலுத்தது. உட்கட்சி மோதல் விஸ்வரூபம் அடைந்த நிலையில், 2008ல் பதவி விலகினார் ரங்கசாமி. அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியவர், 2011 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும், அதிமுகவை கழற்றி விட்டார். சுயேச்சை ஒருவரது ஆதரவுடன், மூன்றாம் முறையாக முதல்வராக பதவியேற்றார்.ஆனால், 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சிக்கு 8 இடங்களே கிடைத்தன. இதனால் 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2021ல் அவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியது. தேஜ கூட்டணியில் இணைந்து நான்காம் முறையாக முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி.இந்த தேர்தலில் தேஜ கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த ரங்கசாமி, மீண்டும் வெற்றிமுகத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் அவரது கூட்டணி வெல்லும் நிலை உள்ளது. இதனால் அவர், ஐந்தாம் முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am