Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்

 எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது சிறப்பு நிருபர்

சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக.,வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 4) வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது.

விஜய் தனது முதல் மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது; நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். அதேபோல், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்தது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது தவெக. பெரும்பான்மை இடங்களை பெறவில்லை என்றாலும், கூடுதல் தொகுதிகளில் த.வெ.க வெற்றி முகத்தில் இருக்கிறது. பகல் 1 மணி நிலவரப்படி தவெக மட்டும் 38 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி துவங்கி 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார். கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை.
அப்படியிருக்கையில் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

மே 05, 2026 12:28 pm

கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் இறங்கி வெற்றி பெற்றதே மகத்தானது தான்.

Reply Rate this
மே 05, 2026 07:49 am

எம்ஜிஆர் அளவுக்கு தகுதியானவர்கள் இன்னமும் பிறக்கவில்லை அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான்.....மாய வலையில் சிக்கிய தமிழக மக்கள்.... பாவம்

Reply Rate this
மே 04, 2026 07:30 pm

அடுத்த கெஜ்ரிவால் ஆகாமல் இருந்தால் சரி

Reply Rate this
மே 04, 2026 06:30 pm

ஆகமொத்தம்... வடக்கன்சை தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்? அவனாவது பரவாயில்ல... எழுத்தறிவு, படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனால், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு”..ன்னு சொல்லிட்டு... எம்ஜிஆர்... விஜய்... ஆகிய நடிகர்களை முதலமைச்சராக்குவது தமிழ்நாட்டு முட்டாள்களை விட உலகத்தில் எவனையும் அடிச்சுக்க முடியாது? இதுல... படிச்சவனுங்கதான் அதிகமா ஓட்டு போட்டிருக்கானுங்க, அதுதான் மிகச் சிறப்பு? இதுக்கு பீகார் மக்கள் எவ்வளவோ பரவாயில்ல... நல்ல மக்கள்.

Reply Rate this
Thravisham - Bangalorw
மிக உண்மை. பெருந் தலைவர் காமராஜரையே தோற்கடித்த திருட்டு த்ரவிஷங்கள் நிறைந்த தமிழகம் அல்லவா. ஒரு டி டி செய்த தவறினால் ஒரு குடும்பமே ஊழலில் ஊறி உலக பணக்காரர் வரிசையில் சேர்ந்ததுதான் மிச்சம்
மே 04, 2026 07:28 pm
Rate this
மாபெரும் தற்குறியா இருக்கிறியே .... சின்னமேளம் நடிகர் இல்லையா ????
மே 04, 2026 07:48 pm
Rate this
இதை சீப்பு செந்தில் ன்னு ஒருத்தன் போலி பத்திரிகையாளன் திருட்டு திமுகவின்
முரட்டு அடிவருடி முன்னாடியே சொல்லிட்டான் அந்த ஓசிப்பயலை எல்லாரும் போட்டு வெளுத்துகிட்டு இருக்காய்ங்க. அது தெரியாத மக்கு. ஓடிப்போயிடு. உன்னையும் போட்டு வெளுத்துப்புடுவாங்க.
மே 04, 2026 08:19 pm
Rate this
பீகார் மக்கள் பற்றி உங்கிட்ட எவன் சர்டிபிகேட் கேட்டான்? உன் முதுகை பாரு மேன்.
மே 04, 2026 08:21 pm
Rate this
Thravisham - Bangalorw
கஷ்ட காலம்தான். இனிமே ஓசி பிரியாணி 200 வருவதும் சந்தேகம்.
மே 05, 2026 07:40 am
Rate this
ஒரு தற்குறி... இன்னொருத்தனை பார்த்து தற்குறின்னு சொல்லக்கூடாது... புரியுதா, தற்குறியே...?
மே 06, 2026 11:06 am
Rate this
தற்குறி வி.வெங்கடாசலம்... தினமலர் வெப்பேஜ் துவக்க காலத்திலிருந்து இங்கே இருக்கிறேன்... நீ நேத்து வந்த தற்குறி... இங்க இருக்குற என் பழைய நண்பர்கள் ஆரூர் ரங்... சேகரா சேகரா... துர்வாசன்... காசிமணி போன்றவர்களை கேட்டுப்பார்...? நீதான் இன்றிருப்பாய், நாளைக்கு ஓடிப் போய்விடுவாய்.. விஜய், கரூரை விட்டு ராத்திரியோடு ராத்திரி சென்னைக்கு ஒடிவந்த மாதிரி...?-
மே 06, 2026 11:08 am
Rate this
மே 04, 2026 05:16 pm

எம்ஜிஆர்ஐயும் விஜய்யையும் சரி சமமாக பார்ப்பதே கேவலம். Mr. Vijai joseph with zero experience in administration may be surrounded by unscrupulous fellows & hv their own selfish agenda. In the best interests of his state & himself he should choose an upright fellow to lead TN in the shadow.

Reply Rate this

ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனன், அருண்ராஜ் போன்றவர்களின் கடுமையான உழைப்பையும் மறந்துடாதீங்க ,

Reply Rate this
மே 04, 2026 03:45 pm

நல்ல நேரத்துல அந்தக் கூத்தாடியை ஞாபகப் படுத்திக்கிட்டு...

Reply Rate this
மே 04, 2026 03:12 pm

நாடு நாசமா போறதுல அவ்வளவு சந்தோசம்

Reply Rate this
மே 04, 2026 02:56 pm

இந்த விசய் வந்தாலும் வந்துட்டுத் தொலையரான் எப்பிடியோ, தமுளு நாட்டு மக்கா செஞ்ச புண்ணியம் அந்த ஒதவாக்கரை, அதான் சுடாலின் பய்யன், அப்ரம் அவரோட பய்யன் நிதி பின்னாளில் மொதுலுவரு ஆவரது கெட்டுதும்மே அது போதும்மே அது போதும்மே மித்தத அப்பரமேட்டிக்கிப் பாத்துக்கிடுவம்

Reply Rate this
மே 04, 2026 02:35 pm

எம்ஜிஆர் வேற லெவல.. அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் மட்டுமே. சமூக வலைத்தளங்கள் இல்லை.. மக்கள் மீது நம்பிக்கை வைத்துக் களமிறங்கினார் .... தனது பொதுக்கூட்டத்தில் மக்கள் இறந்தால் ஓடியிருக்க மாட்டார் ....

Reply Rate this