/ செய்திகள் / கேட்காமலேயே கிடைத்த சீட்; ராமதாஸ் வேட்பாளர்கள் புலம்பல்

கேட்காமலேயே கிடைத்த சீட்; ராமதாஸ் வேட்பாளர்கள் புலம்பல்

பா. ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளதால், தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான கூட்டணியில் சேர முடியாத நிலை ராமதாசுக்கு ஏற்பட்டது. இதனால், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன், ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இருவரும் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஐந்து கட்டங்களாக இதுவரை, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி உட்பட, பா.ம.க., போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு, ராமதாசும் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ராமதாஸ் அறிவித்துள்ள 35 வேட்பாளர்களில் பெரும்பாலோர், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அவர்களிடம் கேட்காமலேயே அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக, ராமதாஸ் அறிவித்த வேட்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான், நான் வேட்பாளர் என்பதையே தெரிந்து கொண்டேன். போட்டியிட விருப்பம் இல்லை. ஆனாலும், ராமதாஸ் மனம் கஷ்டப்படும் என்பதால், அவரிடம் சொல்லவும் முடியவில்லை. ஆனால், சிலர் போட்டியிட விரும்பவில்லை என அவரிடம் சொல்லியதால், வேட்பாளர்களை மாற்றியுள்ளார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !