பாரின் டூர், பைக் பரிசு! தி.மு.க.,வில் உற்சாகம்
திருச்சி, மண்ணச்சநல்லுார் தொகுதியில் சிட்டிங் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் போட்டியிடுகிறார். முன்னதாக, அவருக்கு சீட் கொடுக்க வேண்டும் எனக்கோரி, கட்சியினர் 57 பேர் விருப்ப மனு அளித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் நேரு தலைமையில் சமீபத்தில் நடந்த செயல்வீரர் கூட்டத்தில் பேசிய கதிரவன், ''தேர்தலில் வெற்றி பெற்றபின், எனக்காக மனு அளித்த 57 பேரையும் வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வேன். முசிறி, மண்ணச்சநல்லுார் உட்பட ஐந்து ஒன்றியங்களில் அதிக ஓட்டுகள் பெற்றுத் தரும் கிளை நிர்வாகிகளுக்கு, என் சொந்த செலவில் 130 பைக்குகள் பரிசளிப்பேன்,'' என்று அறிவித்தார்.
ஏற்கனவே, கதிரவன் தரப்பில், கட்சி நிர்வாகிகளுக்கு கார்கள் வாங்கிக் கொடுத்த நிலையில், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடும் கட்சியினருக்கு வெளிநாட்டு சுற்றுலா, பைக்குகள் பரிசு என்று அறிவித்து இருப்பதால், கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்