/ செய்திகள் / இபிஎஸ் காண்பது கனவு: சொல்கிறார் சிதம்பரம்

இபிஎஸ் காண்பது கனவு: சொல்கிறார் சிதம்பரம்

கோவை: ''தொகுதி மறுவரையறைக்காக, அரசியல் சாசன சட்டத்தை திருத்துவது மிகப்பெரிய சூழ்ச்சி,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்டு, சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் புதுச்சேரியை சேர்த்து 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இது, தொகுதி மறுவரையறைக்குப் பின் 60 ஆக உயரும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 80 என்பது 120 ஆகும். நமக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் இடைவெளி அதிகரிக்கும். இனி, நாம் 60 பேர் இருப்போம்; அவர்கள் 120 பேர் இருப்பார்கள். 120 பேரை 60 பேர் எதிர் கொள்ளும்போது, நமது குரல் அமுங்கி விடும். அடுத்த கட்டமாக மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, 60 தொகுதிகள் என்பது, நமக்கு 50 ஆக குறையும். உ.பி.,யில் 120 என்பது 140 என உயரும். 90 தொகுதிகள் வேறுபாடு இருக்கும். இதற்காக, அரசியல் சாசன சட்டத்தை திருத்துவது மிகப்பெரிய மோசடி; மிகப்பெரிய சூழ்ச்சி.என்னுடைய கருத்தை பதிவு செய்து விட்டேன்; முதல்வர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க., பொது செயலர் இபிஎஸ்யிடம் கேட்டால், ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன் என கூறியிருக்க வேண்டும். ஆனால், 'அமித் ஷாவிடம் பேசினேன்; தமிழகத்துக்கு பாதகம் வராது என கூறியுள்ளார்' என, பதில் சொல்லியிருக்கிறார். இது, அடிமைத்தனம். பா.ஜ., ஆட்டி வைக்கும் பொம்மையாக இருக்கிறார் இபிஎஸ். பா.ஜ.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார். அ.தி.மு.க., என்பது பெயரளவுக்கு முக கவசம் தவிர, முகம் பா.ஜ., நான் தான் முதல்வர் என இபிஎஸ் சொல்லிக் கொள்ளலாம்; ஆட்சி அமைக்கப் போகிறேன் என சொல்லலாம். இதை பா.ஜ., தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், பீஹாரில் நிதிஷுக்கு நடந்தது போலவே நடக்கும். முதல்வராகி விடுவேன் என இபிஎஸ் காண்பது கனவு. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandru
ஏப் 15, 2026 10:52

இந்த ஆள் எப்போது தி மு க உறுப்பினர் ஆனான் ?


Sampath
ஏப் 15, 2026 03:07

எலி ஏன் வெயிலில் டிரஸ் இல்லாம அலையது ?


வில்லிபுத்தூரான்
ஏப் 14, 2026 23:18

முதலில் உங்க ஊருக்கு நீங்க உருப்படியா எதுவும் செய்யல.மாநிலத் தேர்தலில் மாநில விஷயங்களைப் பேசுங்கள்.திருடனுக்குத் திருடன் ஆதரவு....


sankaranarayanan
ஏப் 14, 2026 23:01

விரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் காலில் அடிபட்டால் அங்கே வீங்குவதும் கையில் அடிபட்டால் அங்கே வீங்குவதும் ஒன்றாகிவிட முடியுமா பசி அவர்களே எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி பேசி தன்னை குழப்பிக்கொண்டு அடுத்தவர்களையும் குழப்பாதீர்கள்.தமிழ் நாட்டின் பரப்பு - ஜனத்தொகை - ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் வயோதிகர்கள் இப்படி தனித்தனியே பிறகு மொத்தம் எவ்வளவு அதே போன்று உத்திர பிரதேசத்தின் கணக்கெடுப்பும் எடுங்கள் இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா இந்த அடிப்படை தத்துவம் கூட தெரியாமல் நீங்கள் மேடையேறி பேச வந்தது தான் வெட்கக்கேடு. யானையும் பூனையும் ஒன்றாகிவிட முடியுமா


Raj S
ஏப் 14, 2026 22:46

கனவு காண்பது தவறு கிடையாது... உம்மை மாதிரி கொள்ளை கும்பலாகத்தான் இருக்க கூடாது


ஜெகதீசன்
ஏப் 14, 2026 22:40

அதிமுக தோன்றிய பின் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஜெயித்து ஆட்சியை தக்க வைத்த வரலாறே கிடையாது என்பது இந்த வயோதிகருக்கு ஞாபகம் இல்லை போலும்.


Kasimani Baskaran
ஏப் 14, 2026 22:34

அனைவரும் சமம் என்றால் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும். இது போன்ற எளிமையான விஷயங்களைக்கூட புரிந்து கொள்ள முடியாத இவர்கள் திருந்த வாய்ப்பில்லை.


Venkat esh
ஏப் 14, 2026 22:32

இந்த சிதம்பரத்துக்கு ஒரு மண்ணும் தெரியாது..... பழங்கதை பேசி வரும் அரசியல் வாதி..... அப்டேட் ஆகாமல் அவுட்டேட் ஆன ஒரு பழம் பெருச்சாளி


Kbalamurugan
ஏப் 14, 2026 22:18

எப்ப உட்டெர பிரதேஷில் 80 தமிழ் நாட்டில் 40 நமக்கு60 அவங்களுக்கு 120 உன்னக்கு கணக்கு தெரியுமா தெரியாத எப்படி அவங்க குரல் உயரும் dubakkur


sivaram
ஏப் 14, 2026 22:11

காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் செல்லா காசு ஆக்கியவர் , என்ன படித்து என்ன பிரயோஜனம்