தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? திமுகவுக்கு விஜய் கேள்வி
சென்னை: சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? என திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.
2026 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் கமிஷன் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
Advertisement
நீ அரசியல் ஞானசூனியம்... இந்த கேள்வியை எடப்பாடியோ... நயினார் நாகேந்திரனோ... இல்ல... சீமானோ கேட்க தகுதி உள்ள ஆளு...? உனக்கு இது என்னென்னே தெரியாது... நீயெல்லாம் சரிசமமான ஆள் இல்ல...? போலீஸ் வேன்ல வாலியண்டா ஏறிட்டு “நான் ஜெயிக்கு போறேன்... ஜெயிலுக்குபோறேன்... நானும் ரவுடிதான்”...ன்னு வடிவேல் சொல்ற மாதிரி... நீ வாலியண்டரா வந்து கேள்வி கேக்குற... உனக்கு அந்த தகுதியே இல்லையே...? ஒரு அஞ்சு வருஷம் அரசியல் கட்சி நடத்தி.... போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் மக்கள் பிரச்சினைக்காக நடத்திட்டு... அப்புறம் வந்து கேள்வி கேளு...? உன் பின்னாடி வானரகூட்டம் இருக்குறதால நீ கேள்வி கேக்க தகுதி இருக்குன்னு நினைச்சுராத...?
கூப்பன் என்ற பெயரில் கொடுத்து, குவிப்பது பல்லாயிரம் கோடிகள். இனியும் மக்கள் ஏமாந்தால் தமிழகம் கடனில் திவாலாகும்.
8000 ரூபாய் கூப்பனுக்கு என்ன வாங்கலாம் என யோசிப்பதற்கு முன்பாக அந்த கூப்பனை ஏன் கொடுக்கிறார்கள் என யோசியுங்கள்.
8000 ரூபாய் கூப்பனை கொடுத்து அவர்கள் 8லட்சம் கோடிகளை ஆட்டையைப் போடுவார்கள் என்பதனை மனதில் வைத்து ஓட்டு போடுங்கள்.
சதுரங்க வேட்டை மக்களை குறிவைத்து லாபம் அடையும் அரசியல் கட்சிகள் தான் செய்கின்றனர்
திமுகவினால் தமிழ்நாடு நரகம் ஆகிக்கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றும் திமுக படுதோல்வி அடையும்.
மிகவும் முன்னேறிவிட்ட மாநில ஏழைகள் ஓட்டுக்கு 500 லிருந்து 8000 க்கு முன்னேறிவிட்டது பெருமை.
நல்லா தெரிஞ்சி வச்சிக் கோங்க மக்களே ...இந்த தேர்தல் தொங்கு சட்டசபைதான் ...தில்லு முள்ளு கழகம் தி மு க 30 % ஒட்டு எடுக்கும் , அதைவிட தில்லு முள்ளு கழகம் அ தி மு க 30 % ஒட்டு எடுக்கும். நம்ம தமிழக வெற்றி கழகம் த வெ க 30 % ஒட்டு எடுக்கும் ,,,மீதமுள்ளதை சில்லறை கட்சிகள் ஒட்டு எடுக்கும். அப்ப பாருங்க வேடிக்கையை ...அ தி மு க ...த வெ க உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க கென்சோ கெஞ்சின்னு கெஞ்சுவாங்க பாருங்க ...அப்ப பாருங்க ஆட்டத்தை ...
ஜேக்கப் விசை திமுகவை எதிர்ப்பது போல நாடகம் ஆடி திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து மீண்டும் தன் முதலாளிகள் உதய் நிதி மற்றும் சபரிசன் கொடுத்த வேளையை செய்கிறான். தேர்தல் முடிந்ததும் கமல் போல காணாமல் போய் விடுவான்

இவரோட கொள்கையே ரீமேக் தான் போல... படமா இருந்தாலும் சரி அரசியல் நாடகமா இருந்தாலும் சரி...
இனிமே யாரவது கொள்கை என்னனு கேப்பீங்க சுயமாக எதையுமே சிந்திக்க தெரியாத நடிகன் விஜய்