மக்கள் துன்பம் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம்:மக்களின் கஷ்டம், துன்பம், நஷ்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.சேலம் ஜலகண்டபுரம் பகுதியில் , இபிஎஸ் பேசியதாவது: சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், ஜலகண்டாபுரம் பகுதியில் பேசியதாவது: அதிமுகவை போல், பாமகவை பிளவுபடுத்த விஷமிகள் முயன்றனர். திமுகவின் சூழ்ச்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார். அதிமுக, பாமகவை திமுகவால் வீழ்த்த முடியாது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி முதல்வர் கண்டுகொள்ளவில்லை. வருமானம் பார்ப்பதற்காக போதைப்பொருள் விற்பனையை திமுக அனுமதித்து உள்ளது. இன்றைக்கு தனது மகன் மீண்டும் உயர்ந்த இடத்தில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் செயல்படுகிறார். மக்களின் கஷ்டம், துன்பம், நஷ்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை.விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.நெசவாளர்களுக்கு இந்த ஆட்சியில்பலன் கிடைக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடனே கைத்தறி நெசவாளர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். விசைத்தறி தொழில் நலிவடைந்து பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்களின் பிரச்னை சரி செய்யப்படும். பனை தொழிலாளர் நலனுக்காக பதப்படுத்தப்படும் பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am