Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம்: ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை; ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம், தேர்தலையொட்டி 2 நாட்களுக்கு முழு மூச்சாக உழைக்க வேண்டும் என்று ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஏப்.23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நவீன தொழில்நுட்பம் மூலம் 75,000 ஓட்டுச்சாவடி முகவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடினார். அப்போது அவர் பல்வேறு அறிவு.றத்தல்களை வழங்கினார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று ஓட்டுச்சாவடி முகவர்களுடன் (BLA) முதல்வர் உரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
கால் பிரிட்ஜ் (Call bridging) நவீன தொழில்நுட்ப முறையில் ஒரே நேரத்தில் 75,000 முகவர்களுடன் அலைபேசி வாயிலாக நேரடியாக பேசிய முதல்வர், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய இந்த இரண்டு நாட்கள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றும்படி கூறினார்.
மேலும் பேசுகையில், மத்திய பாஜ அரசு நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டமான-தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து தமிழகத்தின் குரலை முடக்கி, நம் மக்கள் நம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக்க முயன்ற சதியை நாம் போராடி வென்றோம். ஆனால் அவர்கள் இதோடு நிறுத்த மாட்டார்கள்.
நாம் பெற்ற வெற்றி வெறும் டிரெய்லர் தான். இன்னும் பல போர்கள் நமக்கு முன்னால் இருக்கின்றன. மக்களுக்கு இதை தொடர்ந்து உணர்த்த வேண்டும். நாம் கட்டியெழுப்பிய-இடஒதுக்கீடு. தமிழர் உரிமைகள், பெண்களின் உயர்வு, சிறுபான்மையினரின் கண்ணியம்-என எல்லாவற்றையும் பின்னோக்கி இழுக்கத் துடிக்கின்ற அவர்களுக்கு எதிராக நாம் வலிமையோடு போராட வேண்டும்.
தமிழகத்தில் ஒரு பலவீனமான ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது தான் நம் மாநிலத்தை பலவீனப்படுத்தி டில்லியில் இருந்து நம்மை ஆட்டி படைக்க முடியும் என திடடம் தீட்டுகின்றனர். அந்த சதித்திட்டத்தை வீழ்த்த நம்மால் தான் முடியும். நம் கூட்டணியால் தான் தமிழகத்தை தகர்க்க வரும் டில்லி அணியை தடுத்து நிறுத்த முடியும். சட்டமன்றத்தில் நாம் வலுவாக இருக்கும் வரை டில்லியால் தமிழகத்தின் உரிமைகளை தொட முடியாது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி முகவரும் இந்த இரண்டு நாட்கள் அவரவர் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு திரட்ட வேண்டும், திமுகவுக்கான ஓட்டுகள் ஒன்று கூட விடுபடக் கூடாது. முதியவர்கள், வயதானவர்களை அழைத்துச் சென்று தொடர்ந்து ஓட்டுச்சாவடி வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தவித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு (08069446900) தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுப்பதிவு தொடங்கி கடைசி ஓட்டு பதிவாகும் வரை ஒட்டுச் சாவடியிலேயே ஓட்டுச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரும் பதிவான ஓட்டுகளை உறுதிப்படுத்தி வார் ரூமுக்கு தகவல் தெரிவித்து படிவம் 17ஐ சேகரித்த பிறகுதான் ஒவ்வொருவரும் ஓய்வு எடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வரும் பொழுது ஒவ்வொரு தொகுதியாக, ஓட்டுச்சாவடி வாரியாக நாம் பெற்ற வாக்குகளை அலசி ஆராய்வேன். அதேபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் அதிக ஓட்டுக்களைப் பெற்று தந்த ஓட்டுச்சாவடி முகவரை நானே நேரில் சந்திப்பேன்.
5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு அலையே வீசுகிறது. நமது சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. மக்கள் மனநிலையும், களநிலையும் நம் வெற்றியை உறுதி செய்கின்றன. தமிழக மக்களின் பேராதரவோடு அடுத்த மாதம் திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைப்பது உறுதி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

ஏப் 20, 2026 05:48 pm

ஐயா அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால் நடக்கும் என்ற நம்ப ப்ரமாஸ் தரத்தை தொடுக்கும் நேரம் வந்துவிட்டது எடுத்து விடுங்க. உபிகள் தெறிக்க விட்டுvaaங்க

Reply Rate this
ஏப் 20, 2026 05:16 pm

கதை வசனம் சூப்பர்

Reply Rate this