மக்கள் துன்பம் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு
சேலம்:மக்களின் கஷ்டம், துன்பம், நஷ்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் ஜலகண்டபுரம் பகுதியில் , இபிஎஸ் பேசியதாவது: சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், ஜலகண்டாபுரம் பகுதியில் பேசியதாவது: அதிமுகவை போல், பாமகவை பிளவுபடுத்த விஷமிகள் முயன்றனர். திமுகவின் சூழ்ச்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார்.
அதிமுக, பாமகவை திமுகவால் வீழ்த்த முடியாது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி முதல்வர் கண்டுகொள்ளவில்லை. வருமானம் பார்ப்பதற்காக போதைப்பொருள் விற்பனையை திமுக அனுமதித்து உள்ளது. இன்றைக்கு தனது மகன் மீண்டும் உயர்ந்த இடத்தில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் செயல்படுகிறார். மக்களின் கஷ்டம், துன்பம், நஷ்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை.
விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.நெசவாளர்களுக்கு இந்த ஆட்சியில்பலன் கிடைக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடனே கைத்தறி நெசவாளர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.
விசைத்தறி தொழில் நலிவடைந்து பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்களின் பிரச்னை சரி செய்யப்படும். பனை தொழிலாளர் நலனுக்காக பதப்படுத்தப்படும் பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
Advertisement
I wonder how many TN voters look at the hard numbers of economic growth during a Govts regime and decide to reward/punish them Source of Data from 5 TN/India Govt official websites through Google Gemini AI:
Prior ADMK Regime 2016–2021 :
Avg. Per Capita Income Growth = 4.42%
Max Real GSDP Growth = Sub-10%
Total State Debt = ₹4.80 Lakh Cr 2021
Debt Growth Rate = 128%
Debt-to-GSDP Ratio = ~28.9% 2021
Stalin Regime 2021–2026 :
Avg. Per Capita Income Growth = 8.15%
Max Real GSDP Growth = 11.19%
Total State Debt = ₹9.29 Lakh Cr Est. 2026
Debt Growth Rate = 93%
Debt-to-GSDP Ratio = ~26.07% Est. 2026
Each and every one of the 5 key factors shown above are better during the DMK regime, than AIADMK prior term. Clearly, theres a good reason to vote for DMK, if economy is the only decision-making factor for a voter.
டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட உங்களுக்கு நன்றாக தெரியும் துன்பத்தை பற்றி
பிஜேபி கூட சேர்ந்து நாட்டை அடமானம் வைப்பது நீங்க... ஸ்டாலினை குறை சொல்லுறீங்க? மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ் நாட்டில் அடையாளம், மக்கள் செல்வாக்கு இல்லாமல் போய்விடும்.. அரசியல் வேறு தமிழ்நாட்டின் தன்மானம் வேறு. இதை புரிந்துகொள்ளுங்கள்.
தீயசக்தியும் கூட்டனிகளும் ஐந்து வருடமாக டாஸ்மாக்கில் குடித்து செய்யாத குற்றங்கள் அளவிடமுடியது, போதையினால் பள்ளி, கல்லுரி,கிராமஙக்கள் வரை விற்று கொலை,கொள்ளை,தலைமுறை தடுமாறி போகிறது, பெண்கள், குழந்தைகள் ,பயமில்லாத சார்கள் மூலம் அச்சத்தில் வாழ்கிறார்கள்,வரி, ஏற்றத வரி எதாவது உண்டா, பால் விலையிலிருந்த தினசரி பொருட்கள் கடும் விலையேற்றம், வேலை வாய்ப்பு இல்லை, விவசாயம் படுக்க வைத்துவிட்ட இவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி , அதிமுக + தேச நலன் காக்கும் பாஜக கூட்டனி வெற்றி பெற வாக்கு செலுத்தும் நாள் 23 ஏப்ரல் வியாழக்கிழமை.

பொறுப்பற்ற மண் பொம்மை ....