/ செய்திகள் / ஆட்சி அமைக்க விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!

ஆட்சி அமைக்க விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார். தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

baala
மே 07, 2026 09:58

இனி உங்களின் பி.எம் கனவு மண்ணோடு ஆகிவிட்டது.


Steel
மே 06, 2026 17:40

ராகுல் கான் கூட சேர்த்தால் மண்ணோடு போவது நிச்சயம்


Gnana Subramani
மே 06, 2026 14:35

2029 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்கும் தைரியம் விஜய்க்கு கிடையாதே


KRISHNAN R
மே 06, 2026 13:56

கட்சி பற்றி கவலை இல்லை


Manyam
மே 06, 2026 13:37

நீண்ட காலம் தங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகளை சரிவர மதிக்காத திமுக அதன் பலன் இது.


Narasimhan
மே 06, 2026 13:18

ராகுல் தன் கட்சியை அகல பாதாளத்தில் தள்ளியவர். சந்தர்ப்பவாதி. அடுத்த தேர்தலிலே திமுக வெற்றி சாத்யமாவது போல் இருந்தால் அங்கு போய் மீண்டும் ஒட்டிக்கொள்வார். தவெக அதிமுக மைனஸ் பாஜகவுடன் போவதுதான் சரியானதாக இருக்கும்


Indhuindian
மே 06, 2026 13:03

Wisdom dawns late Anyway better late than never. இப்பவாவது கூடா நட்பு கேடாய் முடியும் என்று ஞானோதயம் வந்ததே அதுவே மகிஷ்ச்சி


ஆகுயர்த்தோன்
மே 06, 2026 12:45

மோடி அமித்ஷா வந்து வந்து வோட்டு கேட்டும் வெறும் ஒரே ஒரு MLA அனால் காங்கிரஸ் தலை பப்பு வாராமலே தீய சக்தி DMK தயாவால் காங்கிரஸ் க்கு 5 MLA அந்த தீய சக்தி வோட்டு தான் இப்போ TVK வை காப்பாற்ற போகுது ,ஆகவே DMK இன்றி ஒரு அசைவு தமிழ்நாட்டில் இல்லை


Yaro Oruvan
மே 06, 2026 14:04

பாபு கொளத்தூர்ல அழுவுனத பாத்தியா.. தீயமுக ரத்தக்கண்ணீர் வடிக்கிறத பாக்கும்போது மனம் ஆனந்தக்கூத்தாடுதே.. பாஜக 205 சீட் எடுத்து வெஸ்ட் பெங்காலில் ஆட்சி அமிக்கிறத பாத்தியா உப்பி ?? என்னமோ போங்கடா உங்களையெல்லாம் பாத்தா சிப்பு சிப்பா வருது .. புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்கடா.. அதுகளையும் பரம்பர உப்பி உத்யோகத்துல சேத்துவிட்ராதீக


sundararajan
மே 06, 2026 14:39

ஆட்சியில் இருந்த தீயமுக அதன் தலைவராலேயே வெல்ல முடியல.அளவுக்கு அதிகமா கூவாதீங்க.


Modisha
மே 06, 2026 15:08

முதல் அமைச்சராக இருந்தும் மாபெரும் தோல்வி . ஆகவே திமுக இல்லாமல் தான் தமிழகத்தில் எல்லாம் .


Indhuindian
மே 06, 2026 12:41

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் போலீஸ் காரன் எட்டி பாத்தானு மதிய அரசையே கவுதவங்கதான் காங்கிரஸ்


V K
மே 06, 2026 12:37

அங்கு அதிமுக ஆதரவு உன் ஆதரவு தேவை இல்லை