Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு

சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் குறைவாக இருந்த போதும், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர இருக்கிறார்.
இதற்கிடையே மே 7ம் தேதி அவர் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான பிரமாண்ட விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்த வருகிறது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். தற்காலிக சபாநாயகரை தேர்ந்தெடுப்பது குறித்து செங்கோட்டைன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

Advertisement