/ செய்திகள் / தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
சென்னை: தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது; புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில் இன்று (ஏப்ரல் 19) தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தமிழக டிஜிபி மற்றும் சில மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am