Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்

தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

சென்னை: தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது; புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஏப்ரல் 19) தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தமிழக டிஜிபி மற்றும் சில மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement