சிவாஜியை வென்றவர் வெட்கமா இருக்கு என்கிறார்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் தி.மு.க., சார்பில் களமிறங்கியுள்ள சந்திரசேகரன், அங்கு எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 1989ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 என போட்டியிட்ட அவர், எட்டாவது முறையாக இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார். இவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், 1991 மற்றும் 2001 தேர்தல்களில் தோல்வியடைந்த இவர், 2011ல் போட்டியிடவில்லை. திருவையாறு எம்.எல்.ஏ.,வாக 22 ஆண்டுகள் இருந்த இவர், “இப்போது எட்டாவது முறையாக எனக்கு 'சீட்' வழங்கப்பட்டிருப்பது, எனக்கே வெட்கமாக இருக்கிறது. எனினும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,” என்கிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am