/ செய்திகள் / திருவண்ணாமலையில் ஓட்டு இயந்திரம் உடைப்பு: 4 பேர் கைது

திருவண்ணாமலையில் ஓட்டு இயந்திரம் உடைப்பு: 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கீழ்பாலூர் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வந்தது. 208 ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசனின் ஏஜென்ட் தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உடைத்ததால் ஓட்டுப்பதிவு தடைபட்டது.இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஏஜென்ட் உட்பட 4 பேரை கைது செய்தனர். உடைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகி இருந்த 208 ஓட்டுகளை கன்ட்ரோல் யூனிட்டில் இருந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !