Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது

ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். ஓட்டுச் சாவடிக்குள் வீடியோ எடுத்தால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் கமிஷன் எச்சரித்து உள்ளது.

இந்நிலையில் திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்த வீடியோவை வெளியிட்ட தவெக ஆதரவாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பலர் தாங்கள் ஓட்டு போட்ட வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement