ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்: பிரேமலதா அட்வைஸ்
சென்னை : ''சட்டசபை தேர்தலில் அனைவரும் எல்லா வகையிலும் சிறப்பாக வேலை செய்துள்ளோம். எனவே, ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தே.மு.தி.க., வேட்பாளர்களுடன், கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. கணிப்புகளை பொறுத்தவரை, 'ஆக்க பொறுத்தவர்கள், ஆற பொறுக்க வேண்டும்' என்பது தான் என் கருத்து. தேர்தலில் அனைவரும் எல்லா வகையிலும் சிறப்பாக வேலை செய்துள்ளோம்; களத்தில் தீவிரமாக பணியாற்றி இருக்கிறோம். இதற்கான விடை வரும் 4ம் தேதி தெரிந்து விடும். எனவே, தேவையற்ற எதிர்பார்ப்புகள், கற்பனைகள் யாருக்கும் தேவையில்லை. இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்; மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். போட்டியிட்ட 10 பேரும் சட்டசபைக்கு செல்வோம் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திமுகவுக்கு விஜயகாந்த் அவரது மனைவி மூலமாக ஆப்பு வைத்துவிட்டார். செத்தும் தமிழகத்துக்கு நல்லதையே செய்துள்ளார்.
இப்போ ரொம்ப ஆறி போச்சு
இனி முழுக்க முழுக்க ஓய்வுதான் சகோதரி
வாழ்த்துக்கள் , வெற்றிகரமாக திமுகவை வழகக்கு கொண்டு வந்துவீட்டீர்கள்
ஆக்கியதை சூடு ஆறுவதற்குள் தின்றால் தான் நன்றாக இருக்கும். ரொம்ப நேரம் ஆகி விட்டால் ஊசி போய் விடும்.
பிரமாதம். பத்தில் எவ்வளவு தேறும்.
இவருக்கு கவலை இல்லை ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்து விட்டது
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று இது தெரியுமா
எதற்கு பொட்டி வாங்கவா ?
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am