Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்: பிரேமலதா 'அட்வைஸ்'

 ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்: பிரேமலதா 'அட்வைஸ்'

சென்னை : ''சட்டசபை தேர்தலில் அனைவரும் எல்லா வகையிலும் சிறப்பாக வேலை செய்துள்ளோம். எனவே, ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தே.மு.தி.க., வேட்பாளர்களுடன், கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. கணிப்புகளை பொறுத்தவரை, 'ஆக்க பொறுத்தவர்கள், ஆற பொறுக்க வேண்டும்' என்பது தான் என் கருத்து.

தேர்தலில் அனைவரும் எல்லா வகையிலும் சிறப்பாக வேலை செய்துள்ளோம்; களத்தில் தீவிரமாக பணியாற்றி இருக்கிறோம். இதற்கான விடை வரும் 4ம் தேதி தெரிந்து விடும். எனவே, தேவையற்ற எதிர்பார்ப்புகள், கற்பனைகள் யாருக்கும் தேவையில்லை.

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்; மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். போட்டியிட்ட 10 பேரும் சட்டசபைக்கு செல்வோம் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement