/ செய்திகள் / த.வெ.க., ஆட்சி: வைகோ கணிப்பு

த.வெ.க., ஆட்சி: வைகோ கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''த.வெ.க., ஆட்சி அமைக்குமா என்பது, ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியவரும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: அதிகமான கருத்து கணிப்புகள், தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. ஒரு கருத்து கணிப்பு, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவும்; மற்றொரு கருத்து கணிப்பு, த.வெ.க.,வுக்கு சாதகமாகவும் அமைந்திருக்கின்றன. த.வெ.க.,வுக்கு மாணவர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஓட்டுகள் எண்ணப்படும்போது தான் உண்மை நிலை தெரிய வரும். தமிழகத்தில் த.வெ.க., குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. பலரின் உழைப்பு மற்றும் தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம். அதை யாராலும் அழிக்க முடியாது. என் நம்பிக்கை என்னவென்றால், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !