/ செய்திகள் / எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்

எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக.,வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 4) வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது. விஜய் தனது முதல் மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது; நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். அதேபோல், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்தது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது தவெக. பெரும்பான்மை இடங்களை பெறவில்லை என்றாலும், கூடுதல் தொகுதிகளில் த.வெ.க வெற்றி முகத்தில் இருக்கிறது. பகல் 1 மணி நிலவரப்படி தவெக மட்டும் 38 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி துவங்கி 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார். கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை. அப்படியிருக்கையில் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !