20 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது குறைவாகவே ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
சென்னை: கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் மிக குறைந்த அளவே ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், 85 சதவீதம் அதாவது, 4.88 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். சதவீத கணக்கில் பார்த்தால், இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஓட்டு பதிவாகும். இதை வைத்து, மக்கள் பெரும் ஆர்வமுடன் ஓட்டு போட்டதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கள்ள ஓட்டு தடுக்கப் பட்டதால் தான். எஸ்ஐஆர் வரவேற்கத்தக்க சிறந்த செயல்
அதிகம் வாக்கு சேர சேர சதவிகிதம் குறைய தானே செய்யும் 99% உதாரணமா வைச்சிகிட்டா 1% தான் தேவை
கடைந்த முறைக்கும், இம்முறைக்கும், சார் மூலமாக 20 லக்ஷ்சம் போலி வாக்குகல் தடுக்க பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால் 2021 இல் 4, 62, 00,000 வாக்குகளில் 4,42,00,000 வாக்குகள் தான் உண்மையானவை. அதனால் இம்முறை 23, 00,000 + 20,00,000 = 43,00,000 வாக்குகள் அதிகம், 10% வாக்குகள் சார் எல்லாம் அதிகரித்திருக்கிறது.
18 ஐத் தாண்டி முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் இளைஞர்களது எண்ணிக்கை முன்பை விட குறைவாகவே அதிகரித்துள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் ஒரே குழந்தை மட்டுமே. திருமண வயதும் வேகமாக அதிகரித்து பிரமச்சாரி தனிக்கட்டைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால் புள்ளிவிவரங்களின் பொருள் INTERPRETATION வேறாகத்தெரியும்.
2001 தேர்தலில் அன்றைய திமுக அரசுக்கு எதிரான அலை எதுவும் இல்லை. அதனால் வாக்காளர்கள் பெரும் திரளாக வாக்களிக்கவில்லை. ஆனால் கூட்டணி அமைத்ததன் காரணமாக அதிமுக வென்றது. 2006ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஜெயலலிதாவின் அதிரடியான நல்ல நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் என மாற்றம் விரும்பியவர்கள் அதிக அளவில் வாக்களித்ததால் சதவீதம் கூடியது. இப்படி தான் பகுப்பாய்வு செய்ய வேண்டுமே தவிர 2006ல் தான் இந்த முறையை விட வாக்கு சதவீதம் அதிகரித்தது என்ற வாதம் தவறானது. 2006க்கு பிறகு படிப்படியாக விழிப்புணர்வு அதிகரித்ததால் சதவீத அதிகரிப்பு சீராக படிப்படியாக தான் உயர்ந்து வருகிறது.
செத்தவர்கள் யாரும் இப்போது ஓட்டு போடுவதில்லை
நாடு முழுவதுமே மக்கள் தொகை அதிகரிப்பு வேகம் குறைந்துவிட்டது. 1990 களில் 25 சதவீதம் இருந்த அதிகரிப்பு 2015 க்குப் பிறகு 17 சதவீதமாக ஆகியுள்ளது. இதற்கேற்ப வாக்காளர் அதிகரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதில் ஆச்சர்யமில்லை.
செய்தியாளர்களுக்கும் புள்ளியியல் நிபுணர்களுக்கும் வாசகர்கள் தான் கற்பிக்க வேண்டியதாக உள்ளது.
சுதந்திர இந்தியாவிலேயே இந்த தேர்தலில் தான் அதிகபட்ச வாக்கு பதிவாகியுள்ளது என்பதோடு நிறுத்த வேண்டியது தானே? முந்தைய தேர்தலை விட ஒரு தேர்தலில் அதுவரை இல்லாத வாக்கு இடைவெளி இருந்தால் அது முந்தைய தேர்தலின் குறை. அதை உரக்க சொல்வதை விட்டு விட்டு எதையெதையோ கூறிக் கொண்டு.......
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am