Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 20 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது குறைவாகவே ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

 20 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது குறைவாகவே ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

சென்னை: கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் மிக குறைந்த அளவே ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளது.

கடந்த 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், 85 சதவீதம் அதாவது, 4.88 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். சதவீத கணக்கில் பார்த்தால், இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஓட்டு பதிவாகும். இதை வைத்து, மக்கள் பெரும் ஆர்வமுடன் ஓட்டு போட்டதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

இதற்கு விஜயின் த.வெ.க., காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமா என்ற விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இம்முறை மிக குறைந்த அளவே ஓட்டு சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

தமிழகத்தில், 2001 தேர்தலில், 2 கோடியே 80 லட்சத்து 48,077 ஓட்டுகள் பதிவாகின; அதை விட 2006ல், 15.02 சதவீதம் அதிகமாக, அதாவது 49 லட்சத்து 57,415 ஓட்டுகள் அதிகம் பதிவாகின.

பின், 2011ல் 10.21 சதவீதம் அதாவது, 37 லட்சத்து 51,321 ஓட்டுகள் அதிகமாகின. 2016ல், 14.36 சதவீதம் அதாவது, 61 லட்சத்து 47,472 ஓட்டுகள் அதிகம் பதிவாகின. 2021ல் 7.21 சதவீதம், அதாவது 33 லட்சத்து 32,431 ஓட்டுகள் அதிகம் பதிவாகின.

கடந்த 2021ல் பதிவான 4 கோடியே 62 லட்சத்து 36,716 ஓட்டுகளோடு ஒப்பிடும்போது, இம்முறை 5.50 சதவீதம் மட்டுமே அதிகம் பதிவாகியுள்ளன. இது, கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, மிக குறைவான ஓட்டு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement