'பூத் ஏஜன்ட்'களுக்கு இன்னொரு 'கவனிப்பு'; விபரங்களை சேகரிக்கும் தி.மு.க., தலைமை
திருப்பூர்: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, அனைத்து தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளின் விபரங்களை, பூத் வாரியாக தி.மு.க., தலைமை கேட்டு பெற்றுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 4.88 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
ஆளும் கட்சியான தி.மு.க., சட்டசபை தேர்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பே பூத் கமிட்டி அமைத்து, தன் பணியை தொடங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களில், 30 சதவீதம் பேரை, ஓரணியில் தமிழகம் என பெயரிட்டு, தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை மேற்கொண்டது.
இது சில இடங்களில், 40 சதவீதம் என அதிகரித்தது. இந்த கட்டமைப்பை தி.மு.க., விடாமல் தொடர்ந்து மேம்படுத்தும் வகையிலான பணியை, மும்முரமாக மேற்கொண்டது. இப்பணிக்கு அமைக்கப்பட்ட பூத் கமிட்டியில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இணைக்கப்பட்டனர்.
இதில் இணைக்கப்பட்ட பெண்கள், மண்டல வாரியாக நடந்த மகளிர் மாநாடு நிகழ்வுகளுக்கு, 'கவனிப்பு'டன் அழைத்து செல்லப்பட்டனர். அனைத்து பூத்களிலும், பெண்கள் ஓட்டுகளை கவரும் வகையில், பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
பிரசாரத்துக்கு தனிப்பட்ட பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு குறிப்புகள் மற்றும் பதிவேடுகள் வழங்கப்பட்டன.
ஓட்டுப்பதிவுக்கு முன்தினம் வரை, இந்த குழுவினர் வீடு வீடாக சென்று, 8,000 ரூபாய் கூப்பன் வழங்குவது, ஓட்டுக்கு பணம் வழங்குவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
பூத் ஏஜன்ட்களுக்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியலுடன் படிவம் - 17 குறிப்பேடு வழங்கப்பட்டது. இதில் பதிவான ஓட்டு விபரம் மட்டுமே பதிவு செய்யப்படும். ஆனால், தி.மு.க., பூத் ஏஜன்ட்கள் தங்கள் கட்சிக்கு யாரெல்லாம் ஓட்டளித்துள்ளனர் என்ற விபரங்களையும் சேர்த்து பதிவு செய்து கொண்டனர்.
ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாள், இந்த விபரங்கள் அனைத்தும், பகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை நேற்று முன்தினம், மாவட்ட நிர்வாகிகள் வாயிலாக கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு பின், இந்த விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும்.
சரியாக இருக்கும்பட்சத்தில், சிறப்பாக தேர்தல் பணியாற்றியோருக்கு, மற்றொரு 'கவனிப்பு' செய்யப்படும் என்கின்றனர் கட்சியினர்.
Advertisement
DRAVIDA MODEL ENDRAALE THITUTTUTHANAM MOLLA MAARITHANAM MATTUME DIPET.
பிஜேபி கட்சியாக இருந்தால் பரவாயில்லை. தேர்தல் முடிந்து பிறகு எம்பி & எம்எல்ஏக்களை வாங்கி விட்டால் போதும்.
ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு தான் வெற்றி பெற வேண்டும்

பில்டம் பண்றோமோ, பீலா விடுறோமோ... ஆனால், நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்...னு வடிவேல் ஒரு படத்தில் காமெடி வசனம் சொல்வார்...? அதுபோல... கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பே... திமுக பூத் கமிட்டி போட்டுவிட்டு... அவர்கள் உண்மையாகவே அந்த பாகத்தைச் சேர்ந்த வாக்காளர்தானா... இல்ல... போலியா என்பதை மொபைல் போனில் தொடர்பு கொண்டு உறுதி செய்து... போலி ஆட்களை நீக்கிவிட்டு... குறிப்பாக ஒரு பாகத்திற்கு குறைந்த பட்சம் 80 பெண்களை நியமனம் செய்து.. அவர்கள் பக்கத்து வீடு, அக்கத்து வீடு பெண்கள் என்பதால், ஒரு வீட்டின் அடுப்பங்கரை வரை சென்று அவர்களிடம் சிரித்து பேசிக் கொண்டே... தன் கட்சியின் சாதனைகளை, திட்டங்களையும் பொறுமையாக எடுத்துரைக்கும் பெண்களின் பணி ஒரு 8 மாதத்திற்கு முன்பே துவக்கப்பட்டுவிட்டது... 800 ஓட்டுக்கு 80 பெண்கள் சைலண்டாக பிரச்சாரம் செய்து முடித்துவிட்டதோடு, தேர்தல் தேதி அறிவித்த பின்னர்.... குழாயடியில், கிணத்தடியில், ஊர் பொதுஇடத்தில் இப்படி பெண்களை கொண்டே பிரச்சார இயக்கத்தை திமுக நடத்தி... அப்பெண் வாக்காளர் மனதில் திமுக சின்னத்தை இடம் பெற வைத்துவிட்டனர்.. அதற்குரிய தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது... இது தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இந்த ஃபார்மாலிட்டிஸ் முடித்து... தேர்தல் தேதி அன்று அப்பெண்கள் பம்பரமாக சுழன்று தங்கள் கட்சியை வெற்றி பெற பாடுபட்டார்கள்...? இது ஒரு ராஜதந்திரம்...? இதைச் செய்து முடித்துவிட்ட காரணத்தால் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்... காரணம், அவரின் களப்பணி.. அதிலும் 75,000 வாக்குச் சாவடி அளவில் களப் பணியாற்றிய காரணத்தால்... அவரது வெற்றி வாய்ப்பு அவருக்கு நன்றாகத் தெரியும்.... ஆனால், சில தற்குறிகள்.... சும்மாவாச்சும் பைத்தியம் மாதிரி... சாலையிலும், தெருக்களில் உங்க விஜய்... உங்க விஜய்...னு கத்திட்டு... விஜய் முதலமைச்சராக மே-8ஆம் தேதி, தன் அமைச்சரவையுடன் பதவி ஏற்கிறார்..னு சமூக வலைதளங்களில் பதிவிட்டு... தங்கள் அரிப்பை நன்றாக சொறிந்து கொள்ளும் தற்குறித்தலைவனா... முக.ஸ்டாலின்...? உழைத்தால்தான் வெற்றி பெறமுடியும், அது வாழ்க்கையிலும், அரசியலிலும் எங்குமே... அதை உணர்ந்தவர் முக ஸ்டாலின்... ஆனால், விஜய்யோ... என் முகவோ 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்னு சொல்லி... பனையூரில் கொரட்டை விட்டு தூங்கிகிட்டிருக்காரு...?