/ செய்திகள் / மே.வங்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட மாட்டோம்: ஆக்சிஸ் மை இந்தியா அறிவிப்பு

மே.வங்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட மாட்டோம்: ஆக்சிஸ் மை இந்தியா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் தவெக 98 முதல் 120 வரை இடங்களை பிடிக்கும் என Exit Poll வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், மேற்கு வங்கத்துக்கு Exit Poll வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.

பாஜவுக்கு சாதகம்

மேற்கு வங்கத்தில் நேற்று 2ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பிறகு, நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. மேற்கு வங்கத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, இந்த முறை பாஜ நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.ஆனால், கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனங்களில் முக்கியமானதான ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், புதுச்சேரி, கேரளா, அசாம், தமிழகத்திற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்திற்கான முடிவை மட்டும் வெளியிடவில்லை.

சவால்

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 7 நாட்களில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகள் அனைத்திலும் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டது. 80 பேர் கொண் 16 குழுவினர், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முறைகளைப் பயன்படுத்தி வாக்காளர் நேர்காணல்களை நடத்தினர்.ஆனால், இப்பணி வழக்கத்திற்கு மாறாக சவாலை ஏற்படுத்தியது. ஏராளமானோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஆய்வுக்கு அணுகிய வாக்காளர்களில் சுமார் 70% பேர் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துவிட்டனர். கருத்துக்கணிப்பில் அதிகம் பேர் பதிலளிக்காதது, ஓட்டு பகிர்வில் நம்பகத்தன்மையை பாதிக்கிறது.

முடிவு

கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்தில், மவுன வாக்காளர்கள் மற்றும் கட்டுப்பாட்டுடன் பதில் அளிப்பது போன்றவற்றால், ஏற்படும் மாற்றங்கள் மிக அதிகம். இதனால், பெறப்படும் கருத்தக்கணிப்புளில் நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பையும் வெளியிட தயாராக இருந்தோம். ஆனாலும், ஆய்வின்தரம், பதில்கள் மற்றும் கருத்துக்கணிப்பின் நம்பதகத்தன்மை குறித்த ஆய்வுக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடுவதை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.கருத்துக்கணிப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரவுகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கான எங்கள் கொள்கைக்கு இணங்க, புள்ளிவிவர நம்பகத்தன்மைக்கான எங்கள் உள் வரம்புகளைப் பூர்த்தி செய்யாத கருத்துக்கணிப்பை வழங்குவதை விட, வெளியீட்டை நிறுத்தி வைப்பதே மிகவும் பொறுப்பானது என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

panneer selvam
ஏப் 30, 2026 22:34

You yourself made a fun by predicting TVK will get majority in Tamilnadu , It is the prediction even actor Vijay will not believe


ஆரூர் ரங்
ஏப் 30, 2026 22:33

அப்புறம் நடைபயிற்சி போக முடியாதுன்னு பயம்.


Venkatesh
ஏப் 30, 2026 21:47

இதுக்கு எதுக்கு கருத்து கணிப்பு


Tamilan
ஏப் 30, 2026 20:22

மேற்குவங்க மக்கள் ஏமாற்று கும்பலை முன்னரே அடையாளம் கண்டுகொண்டு விட்டனர்


Tamilan
ஏப் 30, 2026 20:19

TVK இத்தனை இடங்களை பிடிக்கும் என கூறுவது தமிழகத்தின் தேர்தலை சீர்குலைக்க நினைக்கும், அல்லது தேர்தல் கமிஷன் மூலம் முன்னரே கள்ள ஒட்டு போட்டுவிட்டதை மறைக்க முயற்சிக்கும் மோடி தலைமையிலான இந்து மதவாத கும்பலின் சதி திட்டம் தான் இது.


R.MURALIKRISHNAN
ஏப் 30, 2026 20:48

ஆரம்பிச்சிட்டான்டா டாஸ்மாக் உபிஸ்


N S Sankaran
ஏப் 30, 2026 19:47

ஒரு குழப்பமும் இல்லை, தமிழ் நாட்டில் பேரம் படிந்தது, வங்காளத்தில் படியவில்லை அவ்வளவு தான்.


ஆரூர் ரங்
ஏப் 30, 2026 19:42

தவளைவெறிக் கழகத்துக்கு 120 இடங்களில் டெபாஸிட் போகும் என்பதை தவறுதலாக 120 இடங்களில் வெல்லும் என்று சொன்ன ரிசல்ட் போதும். AXIS உளறலுக்கு உதாரணம்.


ஆரூர் ரங்
ஏப் 30, 2026 19:39

கண்ணா. பயந்துட்டியா? உண்மையைச் சொன்னா ரவுடி கும்பல் சும்மாவிடாது.


தமிழ்வேள்
ஏப் 30, 2026 19:25

மமதை பேகத்துக்கு எதிராக ரிசல்ட் கணிப்பு சொன்னால், அந்த பேகம் முஸ்லிம் பயங்கரவாதிகளை ஏவி இவர்களை/இவன்களது அலுவலகத்தை ஒரு வழியாக்கிவிடும் எனற நியாயமான பயம் காரணம்


அருண், சென்னை
ஏப் 30, 2026 19:21

குழப்பம் வேண்டாம், எத்தனை சீட் ஜெயிக்கும் என்பதற்கு பதிலாக, அந்த எண்களை தோற்பதாக எடுத்துக்கொள்ளுங்கள்... simple