/ செய்திகள் / எந்த கட்சியின் ஓட்டுகளை வாரிச்சுருட்டியது விஜய் அலை?: முழு விபரம்

எந்த கட்சியின் ஓட்டுகளை வாரிச்சுருட்டியது விஜய் அலை?: முழு விபரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, வேறு எந்த கட்சியின் ஓட்டுகளில் கை வைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக 37.30 சதவீதம் (1,74,30,179) ஓட்டுகளுடன் 133 இடங்களை தனித்து வென்று ஆட்சியை பிடித்தது. அத்தேர்தலில் அதிமுக மட்டும் 33.29 சதவீதம் (1,53,91,055) ஓட்டுகளுடன் 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. நாம் தமிழர் கட்சி 6.58 சதவீதம் (30,42,307) ஓட்டுகளை பெற்று அனைத்து இடங்களிலும் தோற்றது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 34.92 சதவீத ஓட்டுகளுடன் 108 இடங்களை கைப்பற்றியது. அதாவது 1,72,26,209 பேர் அக்கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். திமுக 24.19 சதவீதம் (1,19,29,144) ஓட்டுகளையும், அதிமுக 21.21 சதவீதம் (1,04,62,146) ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் (19,72,537) ஓட்டுகளையும் பெற்றுள்ளது.இந்த தகவல்களின் படி விஜய் கட்சியின் அலையால் எந்த கட்சி அதிகம் பாதித்தது என கணக்கிடுகையில், திமுக.,விற்கு 13.11 சதவீதமும், அதிமுக.,விற்கு 12.08 சதவீதமும், நாதக.,விற்கு 2.58 சதவீதமும் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், திமுக.,விற்கு 55,01,035 ஓட்டுகளும், அதிமுக.,விற்கு 49,28,909 ஓட்டுகளும், நாதக 10,69,770 ஓட்டுகளும் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது.அப்படி பார்க்கையில், திமுக மற்றும் அதிமுக.,விடம் இருந்து 3ல் ஒரு பங்கு ஓட்டுகளை வாரி சுருட்டியிருக்கிறது விஜய் அலை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2021ல் திமுக பெற்ற ஓட்டுகளை விட 2026ல் தவெக 2,03,970 ஓட்டுகள் குறைவாகவே பெற்று ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

rk
மே 05, 2026 19:06

kootani katchi vote enga


Sundaran
மே 05, 2026 17:59

ஹிந்துக்கள் முட்டாள்கள் இல்லை விழித்து கொண்டு விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஹிந்துக்களின் ஓட்டை வாங்கி ஜெயித்து விட்டு பின்னர் அவர்களை மட்டம் தட்டுவதும் ஹிந்து கடவுள்களை இழிவு படுத்தியதும் தான் திருட்டு தி மு க தோற்று போக காரணம். . சமாதி கட்டியாகி விட்டது.


M Ramachandran
மே 05, 2026 19:56

ஹிந்துக்களை முட்டாள்கள் இல்லை ஆக்க மாட்டாரு என்று எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள் என்று விளக்க முடியும் அவரின் தேர்தலுக்கு முந்திய நிலையிலிருந்து அவர் ஹிந்துகளுக்காக எந்த வாக்குறுதியையும் கொடுக்க வில்லை. அவர ப்பனுக்கென பேப்பே காட்டினவுறு ஆச்சே. கிருத்துவ மிஷனிருக்கு நான்கொடை கொடுக்க தெரிந்த அவருக்கு அவர் நடித்த பணத்தின் ஒரு சிறு பகுதியையாவது ஏழை எளிய மக்களுக்கு செல விட்டிருப்பாரா? அவர் நடித்த படத்திலே சம்பளமாகவும் கிம்பளமாகாவும் அடித்த பணத்தை அரசுக்கு மறைத்து ஜில்மா வேலைய்யக்கு செலவிடுவதும் ஏமாற்று பேர்வழி என்று பறை சாற்றுகிறதெ. இவரைய்ய நம்பியா ஏசு காஜானாவைய்ய ஒப்படைக்கிறீர்கள். இந்த விதத்தில் பாரதிகள் அரசு கஜானாவைய்ய ஸ்வாகா தேய்த்தாலும் கொஞ்சமாவது கிள்லல்ள்ளி கொடுத்தாரெ.


P.M.E.Raj
மே 05, 2026 17:24

சிம்பிள் கணக்கு, கடந்தமுறை அதிமுகவின்மீது மக்களுக்கு அதிக வெறுப்பு இல்லை. அதனால் வெறும் 3% வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்கள். அப்போது admk பிரிந்து தினகரன் 5% வாக்குகளை பிரித்தார். மேலும், திமுக தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் சேர்த்துதான் அந்த வாக்கு சதவீதம் வாங்கி ஆட்சியை பிடித்தார். திமுக ஆட்சியில் நடந்த அவலங்களினால் இம்முறை மக்கள் பெரும் கோபத்தில் இருந்தனர்.எனவே நடுநிலை வாக்குகள் NDA விற்குதான் வந்திருக்கவேண்டும், ஆனால், விஜய் அவர்களின் தீவிர திமுக எதிர்ப்பு பரப்புரை ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் அறுவடை செய்தது மட்டுமின்றி, NDA விற்கு வரும் வாக்குகளையும் கணிசமாக பிரித்தார். மேலும், புதிய வாக்காளர்களின் 90% பேர் TVK விற்கு வாக்களித்தனர்.


EagleEye
மே 05, 2026 16:53

மிக சரியாக சொன்னீர்கள். அட, இரவு பாத் ரூம் போனாக்கூட இவங்க கூட ஒரு ஆளோடதான் போவாங்க. இவங்க என்னைக்கு தனியா நின்னிருக்காங்க?.


Rathna
மே 05, 2026 16:17

1.05 கோடி மக்கள் போலி திராவிட கொள்கைகளை எதிர்த்து வோட்டு போட்டு உள்ளனர். திராவிட கொள்கைக்கு சமாதி கட்டப்பட்டு உள்ளது. பெண்கள் பாதுகாப்பு, போதை, டாஸ்மாக் போன்றவை இந்த முடிவிற்கு காரணம். இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று மக்கள் உணர்ந்து உள்ளதால் இந்த மாற்றம் நடந்து உள்ளது. கல்லூரி, பள்ளி பெண்களின் பாதுகாப்பு சார் மூலம் மக்களிடம் சார்ந்து உள்ளதால் அனைத்து பெண்களும் மொத்தமாக வோட்டு போட்டு உள்ளனர்.


Keshavan.J
மே 05, 2026 16:07

இந்தக் கணக்கீடும் பகுப்பாய்வும் தவறானது என்று நான் கருதுகிறேன். TVK மற்றும் NTK-வின் மொத்த வாக்குகள் மட்டுமே உண்மையானவை. ஏனெனில், தேர்தலை எதிர்கொள்ளும்போது DMK மற்றும் ADMK கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. உதாரணமாக, ஒரு DMK தொகுதியில் வேட்பாளர், DMK வாக்குகள் + VCK + காங்கிரஸ் + MDMK + மற்றும் பல கூட்டணிக் கட்சிகளின் வாக்குப் பங்கைப் பெற்றிருப்பார். எனவே, ADMK மற்றும் DMK-வின் வாக்குப் பங்கை மதிப்பிடுவது சாத்தியமற்றது.


ஆரூர் ரங்
மே 05, 2026 15:20

திமுக அதிக வாக்குகளை இழந்ததற்கு சார் தான் காரணம் .அதாவது வாக்காளர் பட்டியல் மறு சீரமைப்பு SIR


pandit
மே 05, 2026 17:32

உண்மை. கள்ள ஓட்டுக்கள் சார் மூலம் நீக்கப்பட்டன.


Ms Mahadevan Mahadevan
மே 05, 2026 15:09

35 சதவீதம் ஆதரவு. ஆனாலும் தேவையான சீட் இல்லா. ஸசொற்ப ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி . . 65 சதவீத எதிர்ப்பு. மக்களின் முழு அதரவு இல்லாய். இவரால் நல்லாட்சி தரமுடியாது


Suppan
மே 05, 2026 16:13

திருட்டுக்கட்சி வரத்து நின்றுவிட்டதால் இப்பொழுது 200 ரூபாயை 100 ஆக்க முடிவு செய்துவிட்டதாகத்தெரிகிறது. இது மேலும் குறையலாம். சூதானமாக இருக்கவும்


duruvasar
மே 05, 2026 14:44

ஐயா திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் தனியாக என்ன வாக்கு சதவிகிதம் என்பதை கூட்டணி காரணத்தால் சொல்லமுடியாத நிலையில் எந்த கூட்டணியுமில்லாமல் போட்டியிட்ட விஜய் கட்சியுடன் செய்யும் ஒப்பீடு தவறானது. 1957 இல் தொடங்கி இன்றுவரை திமுகவின் பேஸ் ஒட்டு என்ன என்பது யாருக்கும் தெரியாது. பஞ்சாயத்து தேர்தலில் கூட திமுக தனியாக நின்றால் வெற்றி பெறுவது மிக மிக கடினம்.


M.Selvam
மே 05, 2026 14:10

இப்ப கூட எதிர்க்கட்சிகளுக்கு 126 இடம் ..TVK 108-07 மட்டுமே ..ஆனால் ஊடகம் dmk தோற்றதில் அவ்வளவு ஆர்ப்பாட்டம் விஜய ஓவரா hype பண்ணி


PATTALI
மே 05, 2026 17:53

திராவிட கூமுட்டை, எத்தனை கட்சிகள் சேர்ந்து 126 தொகுதிகளில் வென்றன. - இதைத்தான் திருட்டு திராவிடம் என்பது.