யாருக்கு மெஜாரிட்டி: குழம்பும் தமிழக கட்சிகள்
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால், யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என தெரியாமல், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்தில் உள்ளன.கடந்த 23ம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.
வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை அறிவாலயத்தில் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். 'அனைவரும் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கவனமுடன் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.'ஆட்சியில் பங்கு கேட்போம்' என, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறிய கருத்து பற்றியும், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''தி.மு.க.,வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால், 'நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என, எதிர்க்கட்சிகள் சொல்வது அபத்தம். கருத்து கணிப்புகளை தாண்டி, தி.மு.க., பெரும் வெற்றி பெறும்,'' என்றார்.குழப்பத்தை உருவாக்க தி.மு.க.,வினர் முயற்சி
கடந்த 2011 தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சி தொடரும் என கருத்து கணிப்புகள் கூறின. இது குறித்து ஜெயலலிதாவிடம் ஊடகங்கள் கேட்டபோது, '218 தொகுதிகளுக்கு குறையாமல் வெல்வோம்' என்றார். அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களில் வென்றது. கடந்த 2016 தேர்தலிலும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, மீண்டும் அ.தி.மு.க.,வே ஆட்சி அமைத்தது.இந்த தேர்தலில் அ.தி.மு.க., 210 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க., வெல்லப் போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து குழப்பத்தை உருவாக்குவதற்கும் அக்கட்சியினர் முயற்சி செய்வர்.- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am