யார் ஆட்சி அமைத்தாலும் அ.தி.மு.க.,வின் ஆதிக்கம் இருக்கும்!
- நமது நிருபர் - சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., ஆகியவற்றில், எந்த கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் சரி, தொங்கு சட்டசபை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி உருவானாலும் சரி, ஆட்சியில் அ.தி.மு.க.,வினர் ஆதிக்கம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
11.6 சதவீதம்
கடந்த 1997ல், மத்தியில் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த போது, ராணுவ இணை அமைச்சராக இருந்த என்.வி.என்.சோமு, விமான விபத்தில் மறைந்ததும், அவரது வாரிசு, தேர்தலில் போட்டியிட 'சீட்' கேட்டார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் சம்மதிக்கவில்லை. கட்சியில் கூட்டம், போராட்டமெல்லாம் நடத்திய அனுபவம் இருந்தால் தான், தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியும் என்றார். சில ஆண்டுகளுக்கு பின், ஸ்டாலின் தயவில் தான், என்.வி.என்.சோமு மகள் டாக்டர் கனிமொழிக்கு, சட்டசபை தேர்தலில் தி.நகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. மாற்று கட்சியிலிருந்து வருவோருக்கு, உடனடியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. நடைபெற உள்ள ச ட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு வந்த 19 பேருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வ ழங்கப்பட்டுள்ளது (பட்டியலை பார்க்க). தி.மு.க., போட்டியிடும் 164 தொகுதிகளில், 11.6 சதவீதம் அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இத னால், அ.தி.மு.க.,வின் 'பி' டீம் போல், தி.மு.க., உருவெடுத்து உள்ளது.சர்வவியாபி
இன்றைய நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறியவர்கள், தி.மு.க.,வில் மட்டுமின்றி பல கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அ.தி.மு.க.,விலிருந்து த.வெ.க.,வுக்கு சென்றவர்களில், எட்டு பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 1. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம் 2. நிர்மல்குமார் - திருப்பரங்குன்றம் 3. முன்னாள் எம்.பி., சத்யபாமா - திருப்பூர் வடக்கு 4. முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் - ஆயிரம்விளக்கு 5. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் - லால்குடி 6. வி.எஸ்.பாபு - கொளத்துார் 7. ரெட்டியார்பட்டி நாராயணன் - நாங்குநேரி 8. லோகேஷ் தமிழ்செல்வன் - ராசிபுரம் த.வெ.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டு கூட்டணி அமைச்சரவையில் அக்கட்சி இடம்பெற்றாலும், இவர்களில் சிலராவது அதில் இடம் பெறுவர். அதே போல், அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். அ.ம.மு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும், முன்னாள் அ.தி.மு.க.,வினர் தான். இவ்வாறு, அ.தி.மு.க.,வினர் தமிழக அரசியலில் சர்வவியாபியாக உள்ளனர். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைத்தாலும் முன்னாள் அல்லது இன்னாள் அ.தி.மு.க.,வினரை தவிர்க்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க., பங்கு அதில் கட்டாயம் இருக்கும்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am