Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

 தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: 'சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து திருமாவளவன் விலகி இருப்பது, தி.மு.க., கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதை காட்டுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில், நேற்று அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரி, கோயம்புத்துாரில் பிரச்சாரம் செய்ய, பிரதமர் மோடி வருகிறார். நான் இன்று மதியம் சாத்துார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். மனு தாக்கலுக்கு, மஹாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ் வருகிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். த.வெ.க., தலைவர் விஜய்க்கு கூட்டம் திரளுவது ஓட்டாக மாறாது; தேர்தல் முடிந்தபின் உண்மை வெளிவரும்.

தி.மு.க.,- -- காங்., கூட்டணியில் சல சலப்பு நிலவுகிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விருப்பமின்றி தி.மு.க., கூட்டணியில் உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியிருப்பதும், அந்த கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தியை காட்டுகிறது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையை, 'ஹீரோ' என்கின்றனர், அது 'ஜீரோ' அறிக்கை தான். அதுபோல, 'ஹீரோயின்' என்றும் சொன்னார்கள். உண்மையில், அது 'ஹெராயின்' அறிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, புழக்கத்தை உருவாக்கியது தி.மு.க., தான். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதற்கு, மது பழக்கமே காரணம்; இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement