Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


போக்குவரத்து 'போங்கு': 'செல்ப்' எடுக்காத வாக்குறுதிகள்

போக்குவரத்து 'போங்கு': 'செல்ப்' எடுக்காத வாக்குறுதிகள்

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 90 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் எனக் கூறி வருகிறது. ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இது தவிர, சட்டசபையில் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளிலும், ஏராளமானவை செயல்படுத்தப்படாமல் உள்ளன. அதன்படி, போக்குவரத்து துறையில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள்:

* ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும். 'ஆட்டோ செயலி' கொண்டுவரப்படும், புதிய ஆட்டோ வாங்குவோருக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்

* எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில், 1.23 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்

* இருபது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், சோதனை அடிப்படையில், ஒரு கோடி ரூபாயில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படும்

* போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க, தனியார் பங்களிப்பில் 18 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்

* அரசு போக்குவரத்துக் கழகங்களின், 50 போக்குவரத்து பணிமனைகளில், 75 கோடி ரூபாயில் உட்கட்டமைப்பு புதுப்பிக்கப்படும்

* போக்குவரத்து துறையின் சோதனைச்சாவடிகளில், மின் செயலாக்கம் மற்றும் ஏ.என்.பி.ஆர்., கேமரா, அதிவேகம் கண்டறியும் கருவி, உடலோடு ஒட்டிய கேமரா போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய முன்னோடித் திட்டம், 6 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

* வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், ஐந்து தானியங்கி வாகன சோதனை நிலையங்கள், 25.40 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

* மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஆறு பேருந்து முனையங்கள், 7.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.

Advertisement