/ செய்திகள் / மே.வங்க தேர்தலில் முறைகேடு; பாஜ சின்னத்துக்கு ஓட்டு பதியாமல் தடுத்தது அம்பலம்

மே.வங்க தேர்தலில் முறைகேடு; பாஜ சின்னத்துக்கு ஓட்டு பதியாமல் தடுத்தது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: மேற்கு வங்க தேர்தல் ஓட்டுப்பதிவின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பாஜவுக்கு வாக்களிக்கும் இடம் மறைக்கப்பட்டிருந்த விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேற்கு வங்கத்தில் 2ம் மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து தங்கள் ஓட்டினை பதிவு செய்தனர். மொத்தம் 7 மாவட்டங்களில். 142 தொகுதிகளில் 1448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தில்லுமுல்லு செய்திருப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பால்டாவில் உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்புதிவு இயந்திரத்தில் பாஜவுக்கு ஓட்டுப்போடக் கூடாது என்பதற்காக பட்டன் மீது டேப் ஒட்டி மறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். பாஜவுக்கு அடுத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கான பட்டனும் இதேபோன்று டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோன்று பல ஓட்டுச்சாவடிகளில் பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து பாஜ முக்கிய பிரமுகரான அமித் மால்வியா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் இது பெரும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்க, வேண்டும் என்றே பாஜ தங்கள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்துவதாக திரிணமுல் காங்கிரசார் கூறினர். பாஜ புகார் குறித்து மேற்கு வங்க மாநில தேர்தல் கமிஷனர் மனோஜ்குமார் அகர்வால் கூறியதாவது; அந்த குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தக்கூடாது, விரலில் வைக்கப்படும் அடையாள மை, ஓட்டளிப்பவரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பாரதி
ஏப் 29, 2026 21:26

மறுதேர்தல் மட்டும் பத்தாது மக்கள் வரியை வீணாக்க நீதிபதிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது முதலில் பிழை செய்த அரசு ஊழியர்களுக்கு தூக்குத்தண்டனை தர வேண்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் சட்டத்தை நிலை நாட்ட முடியாத காவல்துறை அதிகாரிக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் விளையாட வேண்டாம் மக்கள் பணத்தை சாப்பிட்டுக் கொண்டு இங்கே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2026 21:06

அங்கே தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ....


Left Pen
ஏப் 29, 2026 20:52

கேடுகெட்ட மம்தா ஆட்சி எல்லா வேலையும் செய்யும்


Priyan Vadanad
ஏப் 29, 2026 19:08

மத்தி ஆரம்பிச்சதை வங்கத்தின் சக்தி பயன்படுத்திக் கொண்டது போல தெரிகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2026 21:04

இண்டி கூட்டணியின் கூட்டாளியான திமுகவிடம் இருந்து கற்றது டி எம் சி ....


M Ramachandran
ஏப் 29, 2026 19:06

ஜனாதிபதி ஆட்சி மறு பிறகு தேர்தல்.


M Ramachandran
ஏப் 29, 2026 19:03

ராகுலு முன்பு இதெ மாதிரி பிஜேபி மேல் இல்லாத குறையை குறை கூறினார். மம்தா ராணி செயலில் செய்து காட்டியுள்ளார். இப்போர் திருட்டு கல்லா ஓட்டுகள் வாயிலாக செய்ய முயலும் இவர் தண்டனைக்கும் உரியவர்.


V Venkatachalam, Chennai-87
ஏப் 29, 2026 18:54

படு பாவிகளா. தில்லு முல்லு கங்கு எல்லையே இல்லையா? எங்க முகஸ் கூட இந்த மாதிரி படு பாதகமா இதுவரை செய்யலியே. ஓட்டு எண்ணி என்னடா சொல்வீங்க. ஓருத்தனுமே ஓட்டு போடலைம்பீங்களா? ஒட்டு மொத்தமா அழிவை தேடிக்காதீங்கடா. எங்க தலீவரு கலீஞரு ஓட்டுச்சாவடிக்கு முன்னாடி ரௌடிப்பயல்களை வைத்து செயற்கை கலாட்டா பண்ணி வர்ரவுங்களை ஓட்டு போட முடியாதபடி தான் பண்ணுவாரு. மாலையில் அந்த போடாத ஓட்டு எல்லாம் கள்ளப்பயலுவ போடுவானுங்க. இது அதையெல்லாம் தாண்டி ஒலக மகா அயோக்கியத்தனமா இருக்கே.


Anantharaman Srinivasan
ஏப் 29, 2026 18:34

அனுபவம் பத்தலை. டேப் ஒட்டி மாட்டிக்கொண்டு விட்டார்கள். பட்டன் ஒரத்தில் Fivical ஊத்தியிருந்தால் அமுக்க முடியாது. தெரிய வாய்பில்லை.


Sivaraman
ஏப் 29, 2026 18:33

தகவல் தொடர்பு சந்திரனைப் தொடும் அளவில் வளரும் நிலையில் இந்த வேலைகள் எடுபடாது.இருக்கும் இடத்தில் இருந்து ஓட்டைப் பதிவு செய்யும் காலமே வரும்.


Madhusudhanan Kuppuswami
ஏப் 29, 2026 18:17

ஓட்டு மெஷினில் சின்னம் மறைக்கும் வேலை நம்ம திராவிட மக்கு மேஸ்திரிகளுக்கு தெரியாம போச்சே .